பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

29

நறுநீரில் தமிழர் ஆடவரும் பெண்டிரும் மூன்று தடவை குளித்தனர். மூன்று தடவையும் மூன்றுவகைப் பொடி கரைந்த நீரில் ஆடினர். முதல்பொடியில் துவர்ப்பொருள் அதாவது உடலைக் கெட்டியாக்கி மயிர்சுருக்கும் பொருள்கள் வழங்கப்பட்டது. இரண்டாவது விரைப்பொடி மணம் தந்தது. மூன்றாவது ஓமாலி கைப் பொடி மென்மையும் பளபளப்பும் தொய்வும் அளித்தது.

மாதவி இவற்றை வழங்கியதாகச் சிலப்பதிகாரம் கடலாடு காதை கூறுவது காணலாம்.

பத்துத்துவரினும் ஐந்துவிரையினும் முப்பத்திருவகை ஓமாலிகையினும் ஊறின நன்னீர் உரைத்த நெய்வாசம் நாறிடும் கூந்தல் நலம்பெறஆட்டி புகையில் புலர்த்திய பூமென்கூந்தல்.

புனுகு (புழுகு) நாளம் (கஸ்தூரி) முதலியனவும் தேனும் மயிர்வளர்வதற்கும் குரல் கனிவுறுவதற்கும் வழங்கப்பட்டன.

அடியார்க்கு நல்லார் இசை நாடகத்துறையில் பழைய தமிழ் நூல்கள் இருந்ததற்குச் சான்றுபகர்ந்து இறந்துபட்டஅந்நூல்களின் சூத்திரங் களைத் தருவது போலவே ஒப்பனைக் கலையிலும் தமிழில் முன் இருந்து இன்று ஆரியர் வரவுக்குப்பின் அழிந்துபட்ட நூல்களிலிருந்து சூத்திரங்கள் தருகிறார்.

பத்துத் துவருக்குச் சூத்திரம்

பூவந்தி திரிபலை புணர்கருங்காலி

நாவலொடு நாற்பான் மரமே.

ஐந்துவிரைக்குச் சூத்திரம்

கோட்டம் துருக்கம் தகரம் அகில் ஆரம்

ஒட்டிய ஐந்தும்விரை.