புதியதோர் உலகம் செய்வோம்
33
அவன் உலக நோக்கை வளர்த்தது. துறைமுக நகரத்துக்குப் பட்டினம் என்ற பெயர் இன்றளவும் தமிழ் ஒன்றில்தான் உண்டு. மயிலைப் பட்டினத்தில் வாழ்ந்த ஒரு திருவள்ளுவர்தான் சாவா முழுமுதல் உலக நோக்கைத் தமிழனுக்கும் தமிழன் மூலம் உலகுக்கும் பண்டு அளித்தார். அணிமைக் காலத்தில் கூடுதற்பற்று முற்றத் துறந்தும் தாய்ப்பற்றும் உலகப் பற்றும் துறவாத பட்டினத் தடிகள் நாகைப்பட்டினத்திலேயே வாழ்ந்து உலக அறம் கண்டார்.
தமிழ் வாழ்வு தமிழகம் கடந்து தென்னாட்டிலும், தென்னாடு கடந்து இந்தியாவிலும், இந்தியா கடந்து உலகிலும் வரலாறு காணாக் காலத்திலேயே பரந்ததுண்டு. இதற்குச் சான்றுகள் பல காட்டலாம். பட்டினம் என்ற சொல், கடற்கரைத் துறைமுக நகரத்தின் பெயர்களாகத் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் இருப்பதே இதற்கு ஒரு விளக்கம் ஆகும். கீழ் கடற் கரையில் குலசேகரன் பட்டினம், காயல் பட்டினம், நாகப் பட்டினம்,சென்னைப் பட்டினம், சதுரங்கப் பட்டினம் ஆகியவை தமிழகத்தில் உள்ளன. மசூலிப்பட்டினம், விசாகபட்டினம் ஆந்திரத்தில் உள்ளன. கங்கைக் கரையில் பாட்னா உண்மையில் பட்டினமே. மேல் கடற்கரையில் சோமநாதபுரத்தின் பழம் பெயர் பட்டினம் என்றே காணப்படுகிறது.
பண்டைத் தமிழர் உலகளாவிய கடல் வாணிகக் களமாக நிலவிய பல துறைமுகப் பட்டினங்களில் காவிரிப் பூம்பட்டினம் ஒன்று இன்றைய பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி பண்டு பொதுவு அல்லது எயிற்பட்டினம் என்று வழங்கிற்று. இன்றைய மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் மல்லைப்பட்டினம் என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் விளங்கிற்று. வஞ்சி, முசிறி என்ற மேல்கரைப் பட்டினங்களிலும் காவிரிபூம்பட்டினத்திலும் எயிற் பட்டினத்திலும் கிரேக்க ரோமர் குடியிருப்புக்கள் இருந்து தமிழர் வாழ்வின் பொங்கலுடன் பொங்கின. நாகையில் சோழப் பேரரசர் ஆட்சிக் காலம் வரை சீனர் குடியிருப்புக்கள் இருந்தன. கடாரம் அல்லது மலாய் நாட்டுப் பேரரசாண்ட பேரரசரும் சீனப் பேரரசரும் அதில் புத்த கோயில்கள் எழுப்பி அவற்றுக்கு மானியம் விட்டிருந்தனர். அக்கோயிலிலுள்ள புத்தர் பொற்சிலை உலகப்புகழ் பெற்றது. தமிழ்ப் பட்டயங்களிலும் இலக்கியங் களிலும் குறிக்கப்பட்டுள்ளது. இன்று இலண்டன் மாநகர்க்