(34) ||.
அப்பாத்துரையம் - 4
கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் இலெய்டன் பட்டயங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.
தமிழர் விழாவில் தழைக்கும் பண்புகள்
பொங்கல் தமிழ் விழா, தமிழர் விழா, போலிப் பழமைக்கு ஆட்பட்ட தமிழன் குடுவை வாழ்வை விட்டுப் பரவை வாழ்வின் உலக நோக்கைக் கொள்ளத் தூண்டுதலளிக்க வேண்டும் விழா அது. அதே சமயம் அது போலிப் புதுமையில் மிதந்தாடும் மிதவல் வாழ்க்கையைத் தமிழன் தமிழகத்தின் வேர்ப்பண்புணர்ந்து, தமிழ், தமிழர், தமிழினம், தமிழ்ப் பண்பு அடிப்படையாக ஓருலகில் இடம்பெறத் தூண்ட வேண்டும் விழாவும் அதுவே.
உலகின் மிகப் பழமையான இயற்கை விழாக்களு ள் பொங்கல் விழா ஒன்று. அது உழவர் விழா. உழவின் எல்லாப் படி வளர்ச்சிகளையும் அது காட்டுகிறது. நெற்பயிர் தமிழர் நாகரிகத்துக்கும் சீன நாகரிகத்துக்கும் அடிப்படை. அரிசிப் பொங்கல் இதைக் குறிக்கிறது. கரும்பு சீனத்துக்கும் தமிழகத்துக்கும் தனியுரிமையுடைய வேளாண்மைச் செல்வம் கரும்பிலிருந்து சருக்கரை ஆக்கிய முதலினம் தமிழினமே. தமிழன் கண்ட சருக்கரை, இன்று உலகெங்கும் தமிழ்ப் பெயருடனேயே வழங்கி எல்லா இனத்தவர் நாவுக்கும் இனிப்பூட்டுகிறது. சருக்கரைப் பொங்கல் இதைச் சுட்டுவது.
மேய்ச்சல் நில வாழ்வு அல்லது முல்லை நில வாழ்வில் மனிதன் எடுத்துப் பழக்கிய முதல் விலங்குகள் ஆடும் மாடுமே. இதுபோலப் புல் வெளிப்பாலை, மணற்பாலை, முட்புதர்ப்பாலை ஆகியவற்றில் மனிதன் எடுத்துப் பழக்கிய விலங்குகளே குதிரை, ஒட்டகை முதலியன. மலையாளக்கரை, பர்மா, இலங்கை, மலாயா போன்ற குறிஞ்சியும் முல்லையும் கலந்த நாடுகளில் மனிதன் பழக்கிய விலங்கே யானை. இவற்றுள் ஆட்டையும், குதிரையையும் பழக்கியவர் வடமேற்காசியப் புல்வெளியில் பண்டுவாழ்ந்த ஆரியர்களே.குதிரையும் ஒட்டகையும் பழக்கியவர் அராபியர். மாடு அல்லது ஆவினத்தைப் பழக்கியவரும் யானையைப் பழக்கியவரும். இந்தியாவில் வாழ்ந்த தமிழினத்தவர்களே. எகிப்தியர் போன்ற பண்டை நாகரிக மக்கள் வழங்கிய பசு இன்றைய வெளியுலகப் பசுவன்று. தமிழினப் பசுவே