36
அப்பாத்துரையம் - 4
போட்டியிடும் அதன் இனிமையை அவன் கண்டு வியந்தான். கனிச்சாறு கெடும். தேன் கெடாது. தேனிலூறிய கனியும் உப்பில் ஊறிய காய்போல் கெடுவதில்லை. புளிக்காடியிலும் இப்பண்பு உண்டு. தமிழன் இவற்றின் பண்பைக் கனிகளுக்கு ஊட்டி, பழங் களுக்கு ஊட்டித் தேம்பழங்கள் உண்டு பண்ணினான். வெட்டி வைத்தாலும், ஈ எறும்பு மொய்த்தாலும் கெடாத பழங்கள் அவை. இவற்றையே தமிழன் தேமா,தேங்கதலி, தேம்பலா என்றான். ன்னும் இவை தமிழகத்தில் உண்டு. ஆனால் தமிழ்ப் பண்பின் உயர்வேபோல தமிழனும் முற்றிலும் அறியாது. உலகமும் ஒரு சிறிதும் காணாமல், அது தமிழகத்தில் மட்டும் காட்டுப் பயிராக மேற்குமலைத் தொடருக்கு அருகாமையில், குமரி முனையின் அருகில் குமுறிக் கிடக்கின்றன. அவற்றில் பண்பறிந்து மீட்டும் உலகுக்களிக்கப் முன்வரவேண்டும்!
புத்தார்வத் தமிழர் இனித்தான்
தமிழர் இன்று தமிழகத்தில் மட்டுமன்றி, தென்னுல கெங்கும் பரந்துள்ளனர். அவர்கள் இன்று ஆள்பவராக இல்லை. ஆனால் இன்னும் ஆக்குபவராக, பயிர் வளம், தொழில் வளம், வாணிக வளம் வளர்ப்பவராகவே உள்ளனர். தென்னுலகிலிருந்து கீழுலகிலிருந்து மீட்டும் 'சமனொளி' பரப்பும் கடப்பாடுடையவர் அவர்களே. உலக நடுவிடமான இலங்கையின் உச்சிமலைக்குத் தமிழர் 'சமனொளி' என்று இதனாலேயே பெயர் கொடுத்தனர்
என்னலாம்.
சாயா முழு நிறை ஓருலகைத் தமிழன் வகுக்க, அதில் தனக்கும் ஒரு இடம் பெறத் தமிழன் அவாவும் அவாவித் திட்டமிடும் புத்தாண்டு நாளாக இலங்குக பொங்கல் புதுநாள்! வள்ளுவர் வாழ்வு மீண்டும் வளம்பெற வேண்டும் நாளாக மலர்க புது வாழ்வு.
தென்றல் பொங்கல் மலர் 1956