புதியதோர் உலகம் செய்வோம்
39
இதன் பின்னரே தகுதித் தேர்வாகத் தேர்தல் முறை வழக்குக்கு வந்தது. தமிழர் இதனைக் குடவோலை என்றனர். ஏனெனில் ஒவ்வொரு சீட்டும் ஒரு ஓலை. அது தேர்தல் பெட்டியாகிய குடத்தில் இடப்பட்டது. கிரேக்கர் ஓட்டுத்துண்டை வழங்கினர். ஆட்சித் தேர்வாகத் தொடங்கிய இதேமுறை பின்னாட்களில் பெருந்தீர்ப்புகளுக்கும் கண்டனங்களுக்கும் பயன்படுத்தப் பட்டது.
அரசியல்
கிரேக்கரிடையே அதேன்ஸ் நகரவெளியின் நடுமையமே நகர்த்தெய்வமான அதேனாவின் கோயிலாயிற்று.
தமிழரிடையே அம்பலத்திலிருந்தே தமிழர் குடியாட்சியின் சமய, சமுதாய, அரசியல் கூறுகள் தொடங்கின. பண்டு ஊரம் பலத்தில் ஆட்சி செய்த குழுவினர் அம்பலக்காரர் என்றும், அதன் உட்குழுவினர் அல்லது வாரியத்தார் அகம்படியர் அல்லது வாரியர் என்றும் அழைக்கப்பட்டனர். இம்மூன்று பெயர்களும் இன்று சாதிப்பெயர்களாய் நிலவுகின்றன. அம்பலத்தில் வழக்காடுபவர் பெயராகிய மன்றாடி என்பதும் ன்று சாதிப்பெயராய் நிலவுகிறது.
வீரருக்கு சிறந்த இடத்திலோ, அம்பலத்தைச் சுற்றிலுமோ அல்லது ஊர்த்தலைவனானால், சிறப்பாகப் புகழ்மிக்கவனானால் அம்பலங்களிலோ கல் எழுப்பப்பட்டது. அதனருகே தலைவன் குடியின் மரபுச் சின்னமான மரமும் குடிச்சின்னமான கொடியும் நிறுவப்பட்டன. அந்த இடம் கோயில் என்றும் மரம் கோமரம் என்னும் கொடியென்றும் அழைக்கப்பட்டன.
தமிழர் அரண்மனையும் கோயிலும் இன்றளவும் கோயில் என்றும் அம்பலம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அம்பலத்தில் பேசுபவருக்கென நாற்கால் பந்தலிடப்பட்ட பின் அது மன்றம் எனப்பட்டது. கூடுபவருக்கும் நீண்ட பந்தல்கள் டப்பட்டபின் அதுவே கூடம் எனப்பட்டது. இவையனைத்துமே பிற்கால கோயில்களாயின. மன்றம் இருந்த இடம் மண்ட பமாகவும் கூடங்கள் இருந்த இடம் திருச்சுற்றுக்களாகவும் மாறின.
அம்பலத்தில் சிறுவர் கல்வி கற்பிக்கும் இடம் பள்ளி எனப்பட்டது. அறச்சாலை அறப்பள்ளியாயிற்று. நாடகமாடும்