40
அப்பாத்துரையம் – 4
கொட்டகையின் அடிப்புறம் அரங்கு என்றும் மேற்புறம் மாடம் என்றும் பெயர்பெற்றன. இவையே கோயில் கோபுரங்களாகப் பின்னாளில் வளர்ந்தன. புத்த சமணத் தொழுகையிடங்களும் முஸ்லிம் தொழு கையிடங்களும் இன்று 'பள்ளி' என்ற இப்பழங்கோயிற் பகுதியின் பெயராலேயே வழங்குகின்றன. கூடம், மாடம் ஆகிய சொற்களிலும் கோவின் இ டமாகிய கோபுரமும் இம்மரபுகளைக் காட்டுகின்றன.
உட்கோயில் கோயில் என்றும் சிற்றம்பலம் என்றும் கூறப்பட்டன.புறக்கோயில் பேரம்பலம் என்னப்பட்டது. பழமை வாய்ந்த உட்கோயில் என்ற முறையிலேயே சிற்றம்பலம் என்ற பெயர் மருவிச் சிதம்பரத்தின் பெயராயிற்று.
பழய குடியாட்சியின் எல்லை விரிய விரிய, எல்லாரும் கூடும் வழக்கம் கைவிடப்பட்டது. பேராட்கள் அல்லது தலைவர்கள் மட்டும் கூடினர்; பின்பேராட்கள் தேர்ந்தெடுக்கப் படும் நம்காலத் தேர்தல்முறை தொடங்கிற்று. தேர்ந்தெடுத்த பேராட்கள் மூலமான குடியாட்சி பொறுப்பாட்சி எனப்படுகிறது. இக்குடியாட்சிப் பண்பு இப்போது குடியரசுகளிடம் மட்டுமன்றி, எல்லா கட்சி வகைகளிலுமே பரவி வருகிறது.
பிரிட்டன் இன்று குடியரசன்று, முடியரசே. ஆனால் குடியாட்சிப் பண்புக்கும் பொறுப்பாட்சிக்கும் அது தாயகமாகக் கருதப்படுகிறது. அரசர் தனியுரிமை எதிர்த்து மக்கள் குடியுரிமைக்குப் போராடியே இக்குடியாட்சிப் பண்பை மேற்கொண்டுள்ளனர்.
பிரான்சில் முடியாட்சியை எதிர்த்து அரசனை ஒழித்துக் குடியரசுடன் கூடிய குடியாட்சி நடத்துகின்றனர்.
அமெரிக்கா அயல்நாடகிய பிரிட்டனின் ஆட்சியில் இருந்தது.பிரிட்டனை எதிர்த்துப் போரிட்டு விடுதலைப்பெற்று, அவ்விடுதலையின் மீதே குடியாட்சி அமைத்தனர்.
நாடு,ஆட்சி,உரிமை - இவை குடியாட்சியின் மூன்று படிகளென்பதை இம்மூன்று நாடுகளும் காட்டுகின்றன.
தமிழருக்கு இன்றும் நாடும் இல்லை. ஆட்சியும் இல்லை. உரிமையும் இல்லை. ஆகவே முன்பு நாம் கிரேக்கரை ஒத்த