இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதியதோர் உலகம் செய்வோம்
41
நிறைகுடியாட்சி உடையவர்களாயிருந்தாலும் இன்று நமக்குக் குடியாட்சியும் இல்லை. ஆட்சியும் இல்லை, நாடேயில்லை.
பிரிட்டனும் இந்தியாவும் நாடுகளாய் இருந்த சமயங்களில் மற்ற நாடுகளுடன் நிலப்படை கடற்படையெடுத்து ஆண்டவர்கள் நாம். அவர்கள் ஆள நாம் உரிமையற்றிருக்கும் நிலை குரங்குகள் ஆள மனிதர் மரமேறிக் குந்திக் கொண்டிருக்கும் நிலையேயாகும்.
இந்த நிலைபெற, பண்டைக் குடியாட்சியின் புதுப்பிறப்பு, புதுமலர்ச்சி உண்டுபண்ண, தமிழர் தமக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேநாட்டு நாகரிகம் அளித்த குடியுரிமையை நன்கு பயன்படுத்த வேண்டும்.
மன்றம் பொங்கல் மலர் 1957