பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 4

காலங்களில் வளர்ந்தும் உள்ளன. ஆயினும் ஆரியப் பேரினத்தின் மூல வளத்தைக் காட்டும் இலக்கியமாக, பண்டிருந்து இன்றுவரை இன வரலாற்றிலக்கியமாகக் கூறத்தக்க இலக்கியம் எதுவுமே இல்லை. திராவிடருக்கு அத்தகைய இலக்கியங்கள் ஒன்றல்ல, நான்கு உண்டு. தமிழிலக்கியம், கன்னட இலக்கியம், தெலுங்கிலக்கியம், மலையாள இலக்கியம் ஆகிய நான்கு இலக்கியங்களுமே நான்கு பேராறுகளாக, திராவிட இனத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு வளத்தையும் வளர்ச்சியையும் எளி நிழற்படுத்திக்காட்டும் இயல்புடையவை. இவை தவிர, ஆரியர் வருமுன்பே திராவிடர் அடைந்திருந்த உலகளாவிய பெருவளத்தையும் வளர்ச்சியையும் படம் பிடித்துக்காட்டும் திராவிட இனத்தனிப் பேரிலக்கியமும் ஒன்று உண்டு.

இதுவே தேவார திருவாசகங்களுக்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பேரிலக்கியம். தமிழகமே 19ம் நூற்றாண்டிறுதி வரை இதனைப் பற்றி மிகுதி அறியாமல் இருந்ததென்பதைத் தமிழ்த்துறை அறிஞர் அறிவர். இதில் வியப்பில்லை. மலையாளிகள், தெலுங்கர், கன்னடியருடன் ஒப்புத் தமிழகம் தம் இலக்கியம் என்று அதுவரை பேணி வந்தது கி. பி. 7ம் நூற்றாண்டு முதல் வளர்ந்த தேவார திருவாசக திருநாலாயிரங்களுடன் தொடங்கிய தமிழிலக்கியத்தையே.

உண்மையில் 'தமிழ்' மொழிக்கு இலக்கியம் என்று கூறத் தக்கது தேவார திருவாசகம் முதல் திருவருட்பா கடந்து நம்மிடம் வந்துள்ள இடைக்கால, இக்கால இலக்கியமே. இந்தப் பகுதியைத் தமிழ் இலக்கியமாகக் கொண்டே டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் காலம்வரை தமிழர் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தனர். தமிழறிஞர் பழந்தமிழிலக்கியம் என்று பெருமையுடன் பாராட்டிய இலக்கியம் இதுவன்றிவேறன்று. தமிழ் சிறந்த மொழி, உலகின் மிகப்பழமை பெருமை மிக்க மொழி என்று டாக்டர் கால்டுவெல், டாக்டர் போப் முதலானவர்கள் வானலாவப் பறந்ததற்குக் காரணமான தமிழ் இலக்கியமும் இதுவே.

அளவில் இந்தத் தமிழிலக்கியமே கன்னடம், மலையாளம், தெலுங்கு முதலான ஏனைய தென்னக மொழிகளுடன் சம்மதிப்புக் கொள்ளத்தக்கது. அவற்றுடன் போட்டியிடத்தக்க