புதியதோர் உலகம் செய்வோம்
49
பெருமைகூட உடையது. இது மட்டுமோ இந்தப் பகுதியைத் தம் தேசிய இலக்கியமாக வைத்துக் கொண்டே தமிழர் தென்னகத்தின் பழைய மொழிகளுடனும் மட்டுமன்றி, மேலையுலகத்தில் புதிய ஐரோப்பிய மொழிகளுடனும் தம்மை ஒப்பிட்டுப் பெருமையடையலாம். சமஸ்கிருதத்துடனும் கிரேக்க லத்தீன்களுடனும் போட்டியிட்டுக் கூட இத்தமிழ் இலக்கியம் தலைகுனிய வேண்டுவதில்லை.
கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, நாச்சியார், மணிவாசகர், சேக்கிழார், தாயுமானவர், வள்ளலார் முதலிய எண்ணற்ற பெருங் கவிஞர்களை ஈன்ற இலக்கியம் இது. ஷேக்ஸ்பியர், காளிதாசன், ஹோமர், தாகூர் போன்ற உலகக் கவிஞர்களுடன் ஒப்பிடத்தக்க பெருமையை இந்தத் தேசிய இலக்கியத்துக்கு அளிக்க இக்கவி ஒருவரே போதியவர்.
வள்ளுவனையும், இளங்கோவையும், நக்கீரரையும், தொல் காப்பியரையும், கபிலரையும் தமிழ்க் கவிஞர் கணக்கில் சேர்க்காமலே உலக மொழிகளிடையே தமிழ் தலை நிமிர்ந்து நிற்கமுடியும். இந்திய மொழிகளிடையே அந்நிலையில் அது பழமைமிக்க உச்சநிலைத் தேசிய மொழியாகவே இயங்கும்.
தமிழ் மட்டுமல்ல இந்திய மொழிகளிலேயே மிகப் பெரிய கவிஞர் கம்பர் என்று டி. கே. சி. போன்றோர் பலர் கருதியதில் தவறில்லை. இந்திய மொழிகளிடையே பழந்தமிழன் நிலை சமஸ்கிருதத்தின் நிலையுடன் ஒத்தது. இந்தியாவில் பழைய ஆரிய இலட்சியமொழி சமஸ்கிருதம். அதனோடொப்ப ஆனால் அதனினும் பழமையும் பெருமையும் விளங்கியதான பழைய திராவிட இலக்கியமொழி பழந்தமிழ்.
வருங்காலத்தென்னகத்தில் தென்னகமக்கள் தொல்காப்பியம், முப்பால், சங்க இலக்கியம் ஆகிய பழந்தமிழ் இலக்கியத் தொகுதியைத் தமிழர்க்குரிய இலக்கியம் என்று விட்டுவிடுவது பேதமைமிக்க செயலாகவே கருதப்படத்தக்கது.ஏனெனில் கடைச் சங்க இலக்கியத்திலேயே புலவர்கள் இன்றைய தமிழகத்திலுள்ள புலவர்கள் மட்டுமல்ல -ஈழம், மலையாளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய எல்லாப்பரப்புகளிலுமுள்ள புலவர்களும் உள்ளனர். ஒவ்வொரு நாட்டுக்கும் மொழிக்கும் உரிய தேசிய கவிஞர்களை, கம்பனின் மூதாதையை, எழுத்துக்களின் முன்னோனை, கம்பனின் மூதாதையை,எழுத்துக்களின்