பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

53

இதனுடன் ஒப்பான, இதன் பழமையுடன் ஒத்த பழமையு டைய மற்றொரு விழா, திருவோண விழா. இது மலையாள நாட்டில் நடைபெறுகிறது. அந்நாட்டவர் இனவிழா, தேசிய விழா அது. சிறுவர் சிறுமியர், இளைஞர் நங்கையர் புத்தாடையுடுத்தி, பூம்பந்தரிடையே பொன்னூசல் ஆடும் விழா இது! இன்று நான்காகப் பிரிந்து தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம் எனச் சிதறுற்று வாழும் தென்னகம் ஒன்றாக, இன்று சாதி சமயச் சழக்கு டன் மறுகும் தென்னக வாழ்வு. ஒரே இன வாழ்வாகக் கொண்டு திராவிடத்தை ஒரே குடைக்கீழ் ஆண்ட பண்டைத் திராவிடச் சக்கரவர்த்தியான ‘மாவலிவாணன்' ஆண்ட நல்லாட்சியின் நினைவாகவே அவ்விழாக் கொண்டாடப் படுகிறது.

இவ்விரு

விழாக்களின் தனிச் சிறப்பு வாய்ந்த பெருமைகளில் சில பலவற்றை நாம் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஈதுப் பெருவிழா ஆகிய ஏனை உலக விழாக்களில் காணலாம். தமிழின நாகரிக ஒளி, உலகெங்கும் மனித நாகரிகமாகப் பரவிச் சுடர் வீசியமைக்கு இது ஒரு சான்று. வட பெருமண்டலங்களில் பனி மூடி இலை தழைகள் யாவும் தம்முள் தாம் அடங்கிய காலத்திலும் வாடா மலர் தேடி, வளமான பசுங்கிளை மரம் தேடி, இன்பக் குடை மரம் வைத்துக் குடும்பத்தில், ஊரில் உடன் பிறப்புரிமையுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை, பண்பில் தமிழ்விழாவுடன் ஒத்த உடன்பிறப்புப் பண்புடைய விழாவே.

பண்டு உழவர் விழாவாக உலகில் கொண்டாப்பட்டு, இன்று தொழிலாளர் விழாவாகப் புது உரம் பெற்று நடக்கும் மேவிழா, மண உரிமை மைத்துன விழாவாகக் கொண்டாடப் படும் ஏப்ரில் விழா ஆகியவையும் தமிழ் விழாவுடன் ஒத்த பண்புடையவைதாம்.

உலகெங்கும் பண்புக் கிளைவிட்டு, அதே சமயம் உலகிலும் சரி, தமிழகத்திலும் சரி, முற்றிலும் சரியாக உணரப்படாத இப் பண்புடை விழாக்களுக்கு மீண்டும் பண்பூட்டி தமிழினத்தில் மட்டுமன்றிச் சூழினங்களிலும், உலகிலும் புது மலர்ச்சியூட்ட வேண்டிய விழாத் தமிழ் விழாவே. அதன் பண்பு மரபுகளில் சிறிது கருத்து ஊடாட விடுவோம்.