புதியதோர் உலகம் செய்வோம்
55
இது குளிர் நிலையிலேயே நிகழ்வது. ஆனால் சோறு பொங்குதல் செயற்கைப் பொங்கல், வெய்த்தின் செயலால் நிகழ்வது. இயற்கையின் செயலாக அமையும் ‘அமைதல்' என்பது இவ்வாறு 'ஆக்கி அமையும்”, அதாவது ‘ஆக்கி அமைக்கப்படும்’. சமயத்தில், 'சமை'யல் ஆகிறது. இயற்கையின் ‘அமைதல் பொங்கலைக் குறிக்க தமிழர் ஒரு ‘சமைதல் பொங்கலை' உருவகப் படுத்திக் கொண்டாடினராதல் வேண்டும்.
பொங்கல் விழாவும் கிறிஸ்துபண்டிகையும் கிட்டத்தட்ட ஒரே பருவத்தில், ஒரு பதினைந்து நாளே இடைவிட்டு நிகழ்வதை நாம் நினைவு கூர்தல் வேண்டும். தமிழகத்திலும் இது முன்பனி பின்பனிப் பருவத்தின் நடு நாள். 'தையும் மாசியும் வையகத் துறங்கு' என்ற நீதிநூலுரை இதை நமக்கு நினைவூட்டுகிறது. மேலை நாடுகளிலும் இது உறை பனிப்பருவத்தின் (Winter) தொடக்கக் காலமே. உலகம் பனித்துயில் கொள்ளும் காலத்திலே, ஒரு விழாக்களும் துயில் புது வாழ்வுக்குரிய காலம், இன வாழ்வின் மாளா உயிர் புதுத்துடிப்புடன் கருவிலெழுங்காலம் என்பதைக் குறிக்கவே இவ்வுயிர் விழாக்களை அறிவார்ந்த தமிழினமும், அதன் பண்பளாவிய பிற இனமும் கொண்டாடுகின்றன என்னலாம். ரு மரபுகளின் உயர் சின்னங்களும் இதைக் குறிக்கின்றன.
ஆனால் பொங்கற் சின்னம் தமிழருக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு.
செயற்கைச் சமயலில் இயற்கைப் பொங்கலுக்குரிய பொருள்கள். பண்புகளெல்லாவற்றையும் ஊட்டினர் தமிழர்.
இயற்கையில் பொங்கும் பண்பு உயிர் நுரையுடன் உயிரணுக்கள் வளமாக்கிப் பொங்கும் தேறல் பண்பு - உடைய பொருள்கள் எவை?
பால்-ஆன் பால் மட்டுமல்ல, அரிசிப்பால். தேன் - தேறலின் பண்புடையது.
வெல்லம் - சருக்கரை. அதற்குரிய கருப்பஞ்சாறு. அச்சாறு தரும் கரும்பு.
பாலின் பொங்கல் வளமாகிய நெய்.