56
அப்பாத்துரையம் - 4
பொலிவு தரும் மஞ்சள்.
மணமும் சுவையும் தரும் இஞ்சி.
பொங்கல் நறுமணத்துடன் அடையும் ஒளி மணம் கருப்பூரம்-புகைமணம் - நறும்புகைகள்.
-
இவற்றின் கலப்பாய் வரும் பலவகை இனிமை இன் கூட்டு- பல வகை மண இன் கூட்டு பல வகை உடல்நல, உளநல இன்கூட்டு பலவகை அழகின் இனிய கூட்டு எல்லாம் ஒரு சேரக் கண்டு, அதைத் தாம் விழையும் இன வாழ்வின் விழாவில் - மலர்விக்க அவாவினர் தமிழர்.
-
இயற்கைப் பொங்கல் ஊற்றி பொங்கி வழிதலல்ல, உள் நின்று அகமலர்ச்சியாக, உயிர் மலர்ச்சியாகப் பொங்கி வழிவதாகும்.
மங்காது,என்றும் வாடாது, உயிர் மரபறாது வாழும், வாழ வேண்டுகிற வாழ்வு தமிழ் வாழ்வு. அதில் இஞ்சி மணம் ஏறலாம். 'இந்தி வாடை ஏறி, 'சமஸ்கிருதத்தின் உயிரற்ற பண்பு கலந்து விடப்படாது'.
-
அது சமஸ்கிருத வாணரின் ஆரியத்தின் சொத்தை மரபு கலந்து ஊழ்ந்துவிடக் கூடாது. தமிழ்ப் பண்பும் அதனுடன் ஒத்த இஞ்சியினத்தவராகிய பண்பார்ந்த அயலவர் மரபினர் தரும் எச்சரிக்கையை பெற்று உயிர்தரவல்ல, ஆனால் பொங்காத கிரேக்க உரோம, எகிப்திய சாலடிய, ஆங்கில, ஐரோப்பிய அமெரிக்க உருசிய மரபுகளில் நலங்கொண்டு அலம் விண்டு ஊழி கடந்து, ஊழி நிலவி, ஊர் கடந்து, ஊழி உலகுக்குப் புந்தி வாழ்வுகள் அளிக்க வேண்டும்.
-
இயற்கையில் உயிர்ப் பொங்கல் மரபுகள் கண்டது போலவே, இயற்கையளாவிய மனித வாழ்வின் இன வாழ்வில், இயலில், கலையில் இலக்கியத்தில், சமுதாய ஆட்சி மரபுகளில், தேசிய வாழ்வுகளில் உயிர்ப் பொங்கல் மரபுகள் கண்டு தானுண்டு உலகுக்கும் அளிக்க வேண்டும்.
'நாடென்ப நாடா வளத்தன’
என்ற வள்ளுவர் மொழி பொங்கல் மொழி. பொங்கல் மரபினை மனித இனக் கனவு கடந்த தமிழ்க் கனவையும் கடந்தது.