புதியதோர் உலகம் செய்வோம்
57
இந்த வள்ளுவக் கனவு. ஏனெனில் நாம் இயற்கையில் பெரும் பொங்கல், காணும் பொங்கலே. இது கடந்து, காணா பொங்கலையே வாழ்வில் அவாவினர் தமிழர். ஆனால் இது அவர்கள் நாடிய பொங்கல் மட்டுமே. ஆனால் வள்ளுவரோ 'நாடாப் பொங்கல்' ‘நாடா வளம்' நாடுகிறார். 'காணா’ததைக் காண கனவுகாண். அத்துடன் நில்லாதே. நேற்றுக் கனவு காணாததை இன்றும், இன்று கனவு காணாததை நாளையும் கனவு காண் என்கிறார். கனவில்கூட என்றும் புதுமை, என்றும் புதிதாக வளர்ந்து பொங்கும் புது வளம், புது வளர்ச்சி, புதுப்பொங்கல் கனவுகள் வளம் பெறவேண்டும். அப்புத்தவா ஊட்டி வளர்ந்து, புது உயிர்த் துடிப்புகள் இயங்கும் பொங்கல் நாடே நாடு, மற்றதெல்லாம் மங்கல் நாடு, ஆரிய நாடு என்கிறார் வள்ளுவர்.
‘வட்டத் தொட்டிவாணர்' காலஞ் சென்ற டி. கே.சிதம்பர நாதனார் தமிழர் 'அப்பளம்' என்று கூறும் மலையாள நாட்டாரின் 'பப்படத்தை’ மலையாளிகள் அல்லது பண்டைத் தமிழின மரபினர் கண்டுபிடித்த மற்றொரு 'பொங்கல் மலர்ச்சியின்' சின்னம் என்று கூறி இனிது விளக்குவர். எந்தக் கூலத்தை அல்லது தானியத்தை அல்லது அவற்றின் தரபை வறுத்தாலும் அவை பொரியுமேயன்றி மலரமாட்டா... அரிசி, சோள மாவு ஆகியவற்றின் தன்மைகூட இதுவே. ஆனால் உமியுடன் கூடிய நெல், சோளம் ஆகியவற்றை வறுத்தால், ‘மலர்ந்து பொரியும்'. இந்த மலர்ந்த பொரியில் சுவையும் உண்டு, ஊட்டச்சத்துக்களும் கெடுவதில்லை என்று கண்டனர். தமிழர் அதே சமயம் இவற்றிலும் உயிரூட்டச் சத்துடைய பயறு வகைகள் மலர்வதில்லை. எனவே நெல்லும், பயறு வகையும் கலந்து, தக்க இனயியல் சரக்குகள் சேர்த்து, ஒன்றின் மலர்ச்சியும் மற்றதன் உயிரூட்டமும் இயைந்த யைந்த ஒரு பொருளைப் பண்டை மலையாளிகள், தமிழினத்தவர் கண்டுபிடித்தனர் - அதுவே
பப்படம்.
பப்படம் செய்யும் ஒரு தனி வகுப்பினர், இன்னும் மலையாள நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு இணையாகச் சுவையுடன் ஏனையோர் அவர்களிடமிருந்து கற்றும் செய்ய முடிவதில்லை.