58
அப்பாத்துரையம் - 4
இவர்கள் தென் கன்னட மாவட்டத்திலிருந்து எங்கும் சென்றவர்களே,
இன்று புதிதாக எங்கும் பரவி வரும் உணவு விடுதிகள் 'உடுப்பி' மரபின என்பதையும், மகாபாரத காலத்திலிருந்தே, இப்பகுதியினர்தான் சமையல், சூதாட்டம், குதிரை ஏற்றம் ஆகிய கலைகளில் உலகின் கரைபோன விற்பனராயிருந்தனர் என்பதையும் நினைவு கூர்தல் வேண்டும். பப்படத்துக்கும் மலையாளிகளின் கலைத் திறத்துக்கும் வட்டத் தொட்டிவாணர் கண்ட புது விளக்கம், தமிழர் பொங்கற் கலைக்கும் கருத்துக்கும்கூட உரியதேயாகும்.
நிறைதல், வழிதல், உண்ணின்று உயிர்மரபில் செழிவுற்று வளம் பெற்று நிறைந்து வழிதல், உயிர் மரபில் பிறந்து உயிர் மரபில் வாழ்வாக வளர்தல், தங்கி நிலையாக வளர்தல், மென்மேலும் நில்லாமல் விரைந்து ஒன்று பத்து நூறாக, பதினாயிரம் கோடி நூறு கோடியாகப் பெருகிக் கொண்டே செல்லுதல், புதுமை பழமை யாகிப் புதுப்புதுப் புதுமை நாடுதல் - இதனை பொருளையும் இயற்கையில் கண்டு, செயற்கையில் உருவாக்கி, கருத்துலகிலும் அதன் இணை பண்பு கண்ட பண்டைத் தமிழரின் பெருமையையும் அறியும் பெருமை, காணும் பெருமைகூட ஆரியத்தால் மட்டும் இன்றைய தமிழகத்துக்கோ அதனுடன் மறுகும் உலகுக்கோ இல்லை. இவற்றை அறியவும் காணவும் மட்டுமல்ல, அறிந்து புது மரபாக்கிப் புது வளம், புதுப் பொங்கல் காணவும் உலகுக்குக் காட்டி மீண்டும் உலகு வளர்க்கும் தாயினமாகவும் தமிழர், தமிழினத்தவர், அவர்கள் பழமரபுடன் வாழ்ந்து புது மரபுடனும் ஊடாடும் தென்கிழக்காசிய மக்கள் கிளர்ந்தெழுவார்களாக!
முப்பால் பொங்குக! முத்தமிழ் முழங்குக!
முப்பழம் பொலிக!
மூவாத் தமிழினம், திராவிட இன வாழ்வு பொங்கல் வளமுடன் மலர்ச்சியுறுக!
தென்றல் பொங்கல் மலர் 1958