62
அப்பாத்துரையம் - 4
அவர்களும் ஆடாமல் அசையாமல் நின்றது காண, அவர்கள் சுவரில் தீட்டிய சித்திரங்களோ அல்லது சுற்றிச் செதுக்கப்பட்ட சிலைகளோ எனத் தோன்றினர்.
எல்லையற்ற மோனம் ஆசிரியரை வரவேற்றது.
மாணவர் இருக்கைகளில் அமர்ந்தவுடன் மக்களும் நிலமீதே அமர்ந்தனர்.
டு
ஆசிரியர் ஹாமெல் கண்களை மூடிக்கொண்டு ஒன்றும் பேசாது ஒரு கணம் நின்றார். ஆனால் அவர் கையில் விவிலிய நூல் இல்லை; பிரஞ்சுப் பாடப் புத்தகம் இருந்தது. பாடம் எடுக்கப் போவதைப் போல அதைத் திறந்தார். ஆனால் திறந்தவுடன் மூடினார். கடைசியாக அப்புத்தகத்தை திறந்து கடைசியாக மூட விரும்புவதுபோல அது காட்சி அளித்தது.பாட விளக்கமாகவும் அவர் எதுவும் பேசவில்லை; அவர் பேச்சு ஒரு கோயில் வழிபாடு போல இருந்தது.
66
மாணவ மாணவி அன்பர்களே! உங்களிடமிருந்து உங்கள் ஒவ்வொருவருடனுமிருந்து நான் பிரியா விடைபெற்றுக் கொள்ளும் நாள் இது! அந்த வருத்தம் எனக்குப் பெரிதுதான். ஆனால் என் வருத்தம் பெரிதல்ல. இதோ உங்கள் தாய் தந்தையர் என் தாய் மொழிக்கும், என் தாய்நாட்டுக்கும் உரிய இவர்கள் -
தோ இன்று மாணவராக வந்திருந்து இந்நிலையில் பங்கு கொள்கின்றனர். அவர்களும் நீங்களும் நானும் நம் தந்தையர் நாட்டை விட்டுப் பிரிந்து சில நாளாகின்றன. தந்தை நீங்கியது முதல் உடனிருந்து நம் நல்வாழ்வுக்கு உழைக்கும் தாய்போல நம் தாய்மொழி மட்டும் நம்முடனிருந்தது. இப்போது தாயும் நம்மை விட்டு நீங்குகிறாள். அந்தத் துயரம்கூடப் பெரிதன்று; நான் இப்போது உங்களை விட்டுப் பிரியும் துயரம்!
“என் உயிர் இப்போது என்னை விட்டுப் பிரிந்தால்கூட நான் இச்சமயம் இதற்குமேல் துயரப்படமாட்டேன். ஏனெனில் உயிரினும் பெரிது தந்தையர் நாடு! தந்தையர் நாட்டின் உயிர் மூச்சுத் தாய்மொழி - நாட்டு மொழி! குழந்தைகள் போலிருக்கும் நமக்கு இன்று துயர் பெரிதுதான். ஆனால் இன்று நான் நம் துயரின் முழு அளவும் அறியமாட்டோம். துயரப் புயல் இப்போதுதான் வீசத் தொடங்கியிருக்கிறது. குழந்தை வளர