இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதியதோர் உலகம் செய்வோம்
65
பதித்த அப்பேராசிரியர் ஒரு நாளைய வாழ்வுக் காட்சியை அழியாச் சித்திரமாக்கிக் காட்டினான்.
நாம் தாயகத்துக்கு தமிழகத்துக்கு, இத்தகைய ஹாமெல்கள், லூயிகள் ஆயிரமாயிரமாக நூறாயிரம் நூறாயிரமாகத் தேவை! அறிவார்ந்த ஜெர்மன் வல்லூறைப் பின்பற்றி அறிவும் பண்புமற்ற இந்திக் கழுகு வட்ட மிடும் இந்த வேளையில் நம் பள்ளி, கல்லூரிகள் இத்தகைய ஆசிரியரை மாணவரை - குளமான கண்களுடன் நாற்பத்தேழு ஆண்டுகள் போராடி அயல் மொழியை ஓட்டிய பெற்றோரைத் திரட்டுமாக!
வாழ்க தமிழ்!
வீழ்க ஆதிக்க அயல் மொழி ஆட்சி!
முரசொலி பொங்கல் மலர் 1958