புதியதோர் உலகம் செய்வோம்
69
அகவல் மிக எளிய யாப்பு என்று பலர் கருதுவதுண்டு. ஆனால் உண்மையில் அதுபோல உண்மைக் கவிஞனுக்கு அருஞ் செயலானது வேறில்லை. சங்க காலத்தில்கூட இளங்கோ, சாத்தானார் போன்ற சிலரே அதனைத் திறம்படக் கையாண்டுள்ளனர். அது போல, பார்ப்பதற்கு இயல்பானதாக, எளிமையானதாகத் தோற்றும் கட்டுரையைவிட முதல்தர எழுத்தாளனுக்குக்கூடக் கடுமையானது வேறு ஒன்றுமில்லை. இயல்பான கட்டுரையின் எளிமை உண்மையில் நடனமாதின் இயல்பான நெளிவு போன்றதே.
நல்ல கட்டுரை இலக்கியம் பிறப்பதற்கு இரண்டு சூழ்நிலைகள் வேண்டும். ஒன்று கலைஞன் இனவாழ்வுடன் முற்றிலும் இணைந்து - அதன் மையமாக இயங்கவேண்டும். மற்றொன்று அவன் இனவாழ்வின் சுழலில் சுழலாமல் ஒதுங்கி அமர்ந்து, அதன் வாழ்வு தாழ்வுகளை இன ஒளியில் படம் பிடிக்கவேண்டும். இந்தச் சூழ்நிலை 18-ம் நூற்றாண்டில் பிரான்சிலும் இங்கிலாந்திலும் நிலவிய கலைக்கழங்களிலும் (Clubs) ஜெர்மனியின் பல்கலைக் கழகங்களிலும், பண்டைத் தமிழகத்தின் அவைக் அவைக் குழாங்களிலும், குழாங்களிலும், உபநிடத ஆராய்ச்சிக்கூடங்களிலும் (உபநிஷத் - ஆய்வுக் கழகம்) இருந்தன. இளங்கோவின் ஒப்பற்ற இலக்கியம், கடோபநிடதம் போன்ற அழகிய அறிவுக்கட்டுரை இலக்கியம், மாந்தெய்ன், லாம்போன்ற கட்டுரை மன்னரின் உரைநடைக் கலை முத்துக்கள், லட்விக் போன்ற ஜெர்மனியின் அழகுநடை வரலாற்றாசிரியர், தற்கால அணிமைக் காலத்து டால்ஸ்டாய், ரோமேன்ரோலந்து ஆகியோரின் கட்டுரை ஏடுகள் - இவை இத்தகைய சூழலில் அமைந்தவை.
கால
தமிழில் கட்டுரை இலக்கியத்துக்குரிய நல்ல சூழல் இன்று ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் அது புதிய இலக்கியத்துறை யானாலும் புதிய மரபு அல்ல. சங்க இலக்கியப் பாடல்கள் பல செய்யுள் வடிவில் அமைந்த அழகிய கட்டுரைகளே. அவற்றின் கடுங்கட்டுக்கோப்பே கலைஞனுக்கும் படிப்பவனுக்கும் உள்ள தூரத்தைப் பெருக்கியுள்ளது. சித்தர் பாடல்கள் உண்மையில் பாடல் வடிவக் கட்டுரைகளே. மிக மிக அழகிய கதை கட்டுரைகளை அவற்றில் காணலாம். முதுமொழிக் காஞ்சி