பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் - 4

திருக்குறட் கருத்தை வடித்தெடுத்து ஒரு மாயக்கலைஞன் வார்த்த கவிதை வடிவக் கட்டுரையே. பாரதியார் பாடல்கள் கவிதைத்துறையில் மட்டும்தான் புரட்சியாகப் பலரால் கொள்ளப்படுகின்றன. காலமும் சூழலும் உணர்ச்சியும் சித்தர்களைப் போலவே அவரைப் பாடகனாகச் செய்துவிட்டன. உண்மையில் அவர் பாடல்கள் கட்டுரைகளுக்குத் தலைப்பாக அமையத்தக்க பாடல் வடிவத் தலைப்புக்களே. தமிழன் குருதியில் கட்டுரை மரபு தொல்காப்பிய காலத்திலிருந்து இன்றுவரை பாலாற்று நீர்போல் அடிப்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை இது காட்டும்.

தம் கருத்துக்களைத் தங்குதடையின்றிக்கூற, இலக்கண இலக்கியச் சுவையன்றி வேறு கட்டுப்பாடின்றிக் கலைஞன் தனக்குப் பிடித்த கட்டுக்கோப்பைத் தானே அமைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் இலக்கிய வரை கட்டுரை ஒன்றே தமிழக இளைஞர்கள் - சிறப்பாகக் கலைக்கழகங்கள் மூலம் மக்கள் வாழ்வின் உணர்ச்சிகளில் ஊடாடுபவர் - இலக்கியத் துறையின் வகை பேதங்களை உணர்ந்து கையாண்டால், மாந்தேய்னின் கட்டுரைக் கவிதை, சால்ஸ்லாமின் இசைக் கட்டுரை, அடிசனின் சமுதாயக் கட்டுரை, ரோமேன்ரோலந்தின் வாழ்க்கை கட்டுரைகள் ஆகியவை தமிழகத்தில் மிளிர்வது எளிது. தமிழகம் ஒரு புதிய பிரான்சாக, பிரான்சிலும் நீடித்த கலைவாழ்வு ஊற்றுடைய உயிர்க்கலைக்கூடமாக திகழ வழி உண்டு.

கலைஞன் - மனித இனம் இவை இரண்டுக்கும் இடையே கலைக் கழகமன்றி வேறு எதுவும் குறிப்பிடாத நிலையைத் தமிழகம் வளர்க்க வேண்டும். தென்றல், முரசொலி, கலைமகள்

போன்ற கலைப்பத்திரிகைகளை இவ்விலக்கியத்துக்கு

வழிவகுக்கும் வாயில்களாக இயங்குவன என்னலாம். இத்தகைய பத்திரிகைகளும் கலைக்கழகங்களும் தமிழகத்தில் பெருகுதல் வேண்டும்.

தென்றல் பொங்கல் மலர் 1959