பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

73

சீனம் முதல் எகிப்துவரையில் உள்ள பகுதிகளும் இன்று போலவற்றின பாலைவனமாக இல்லை. வளமும் செல்வமும் நாகரிகமும் மிக்க பகுதிகளாகவே இருந்தன. அதன் வழியாகச் சீனம் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையேயுள்ள உலக வாணிபப் பாதை சென்றது. அப்பாதையின் மையமாக இருந்த 'ஆரிய' நாடு அதனால் வளமும் நாகரிகமும் மிக்கதாயிருந்தது.

இவ்வளவும் கி. மு. 2000-க்கு முன் உள்ள நிலைகள். ஆரியர் அந்நாளிலிருந்து கி.பி.1200- வரை பல அலைகளாக வந்து மோதி, அந்நடுவுலக நாகரிகத்தின் தடமுழுதும் அழித்தனர். அதே சமயம் அவர்கள் அழித்த நாகரிக மக்களுடன் கலந்து அவர்கள் நாகரிகத்தைத் தாம் மேற்கொண்ட நாகரிகம் பெற்றும் வந்தனர். இவ்வாறு நாகரிகம் பெற்றவர்களே இந்திய ஆரியர், பாரசீக ஆரியர், கிரேக்கர், உரோமர். ஆனால் நாகரிகம் பெற்ற பழைய அலைகளையே நாகரிகமற்ற புதிய முரட்டு அலைகள் அழித்து வந்தன. கி.பி.12-ம் நூற்றாண்டின் பின் பேரரசர் தீமூர் காலத்தில் இந்த அலைகள் ஓய்ந்த பின்னர், அழிந்த உலக வாணிகப் பாதை ரு சிறிது மீண்டும் உயிர் பெற்றது. ஆனால் ரஷ்யாவின் இன்றைய பொதுவுடைமை ஆட்சியில்கூட, இப்பகுதி மக்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் நாகரிக உலகில் பெற்றிருந்த வளத்தையும் இடத்தையும் இன்னும் பெறவில்லை.

ஆரிய இனம், இந்த 'ஆரிய' நாட்டு நாகரிகத்தை அழித்தாலும், அங்கு நீண்ட காலம் தங்கி அந்நாகரிக மக்களுடன் கலந்து, நாகரிகம் பெற்று, தம் புதிய நாகரிகத்தையே ‘ஆரிய’ நாகரிகம் என்று பெருமையுடன் கூறத் தொடங்கினர். அவ்வாறு கூறத் தொடங்கிய பின்தான், அவர்கள் பாரசீகத்திற்கும் இந்தியாவுக்கும் பிரிவுற்று வந்தனர். ஆரிய இனத்துக்கு ‘ஆரிய’ இ னம் என்ற பெயர் வந்த வரலாறு இதுவே.

‘ஆரிய' இனத்துக்கு ‘அரிய’ இனம் என்ற பெயர் தந்தது ஆரிய நாடு. ஆனால் அந்நாட்டுக்கு அப்பெயர் எப்படி வந்தது?

தென்னகத்திலுள்ள நான்கு இலக்கியப் புகழ் வாய்ந்த மொழிகளை மட்டுமே நாம் இன்று திராவிட மொழிகள் என்று கூறுகிறோம். ஆனால் மற்ற பண்படாத் திராவிட மொழிகளையும் சேர்த்தே அறிஞர் கால்டுவெல் ‘திராவிட இன மொழிக் குழு' என்று விளக்கினார். 'இப்பண்படா' மொழிகள் உண்மையில்