பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

75

லாயினர். கவெயின் அது கண்டு, “நான் வந்தால் எளிதில் வெற்றி கிடையாதென்று லான்ஸிலட் ஒழுங்குமுறை பேசித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்" என்று வசைமொழி கூறினான். அதுகேட்டதே லான்ஸிலட் தம் உறுதியைக் கைவிட்டுக் கவெயினை எதிர்த்துப் போருக்கு வந்தார். கவெயின் மீண்டும் மீண்டும் காயமுற்றுத் தோல்வியுற்றும் விடாது குண மடைந்ததும் வந்து போரிட்டான். லான்ஸிலட்டும் அவமதித்த வனென்று எண்ணாது காயமுற்றபோதெல்லாம் எதிர்க்காது விட்டார்.

மூன்றாம் முறை கவெயின் காயமுற்றுக் கிடக்கையில் மாட்ரெட், ஆர்தருக் கெதிராகப் பின்னும் சூழ்ச்சி செய்து, அவர் லான்ஸிலட்டுடன் போராடி மாண்டார் என்ற கதையைப் பரப்பித் தன்னையே அரசனென விளம்பரம் செய்து கொண்டுவிட்டான். இச்செய்தி கேட்டதும் ஆர்தர் காமிலட்டை நோக்கிச் சென்று மாட்ரெட்டை முறியடித்துக் துரத்தினார்.

பேராவல் பிடித்த மாட்ரெட் தோற்றும் தன் சூழ்ச்சி முயற்சிகளை விடவில்லை.கினிவீயரின் பழியைக் கேட்டது முதல் பிரிட்டன் மக்களில் பெரும்பாலோர் அவர் தமக்குச் செய்த நன்மைகளை மறந்து, அவரை எதிர்க்கத் துணிந்தனர். ஆர்தர் வீரரால் முறியடிக்கப்பட்டவர்களும் அவர் ஆட்சியில் தம் தீய எண்ணங்கள் நிறைவேறப்பெறாது புழுங்கிவந்த கயவர்களும் மாட்ரெட்டுக்கு ஆதரவு தந்தனர். ஆகவே, ஆர்தர், மாட்ரெட்டை நாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல தடவை எதிர்த்துப் போராட வேண்டியதாயிற்று.

ஆர்தரால் முன் பன்னிரண்டு போர்களில் முறியடிக்கப் பட்டுப் பிரிட்டனை நாடாது ஓடிய ஸாக்ஸானியர் பிரிட்டனின் சீர்குலைவைக் கேள்வியுற்றுத் துணிகரமாக ஆங்காங்குப் படையிறக்கிக் கொள்ளையடித்தனர்.

ஆர்தர், பிரிட்டனின் நிலைகண்டு மனம் புழுங்கினார். அப்போது அவருக்கு முன் மெர்லின் கூறிய சொற்கள் நினைவிற்கு வந்தன. தம் முடிவு-பிரிட்டனை விட்டுத்தான் வேறு உலகம் செல்லும்-நாள் இனி தொலைவிலில்லை என்பதை அவர் உய்த்துணர்ந்து கொண்டார். தம் வாழ்க்கைத் துணைவியாகிய