பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 40

கினிவீயர் எவ்வளவு நிலைதவறினாலும் அவளுக்கு இறுதியாக அறிவுரை தந்து மன்னித்து வரவேண்டும் என்ற பேரவா அவர் உள்ளத்தில் எழுந்தது.

கினிவீயர் மாற்று உருவில் சென்றாலும், அவளை மடத்துத் தலைவியும் துறவுப் பெண்களும் அறியாமலில்லை. ஆனால், உள்ளூற அவள்பால் அவர்கள் பரிவும் இரக்கமும் கொண்டனர். அரசர் அவள் இருப்பிடம் வந்து அவளிடம் தன் சீரிய வாழ்க்கைக்கு அவள் செய்த இழுக்கை எடுத்துக்கூறிப்பின், “உன்னைக் குறைகூற நான் இங்கே வரவில்லை. உன்னை நான் மனமார மன்னித்துவிட்டேன். ஆனால், கடவுளும் மன்னிக்கும்படி உன் மனத்தின் அழுக்கை நோன்பாலும் நல்லெண்ணத்தாலும் நற்பணியாலும் போக்கி, மேலுல கிலாயினும் என்னை வந்தடைக என்று கூறவே வந்தேன்” என்று சொல்லிச் சென்றார்.

மாட்ரெட் பலதடவை தோற்றாலும் படைகள் முற்றிலும் அழிவதற்கு முன்னமே அவற்றைப் பின் வாங்கியும் புதுப்படைகள் திரட்டியும் நாட்டின் மறுகோடி நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இறுதியில் பிரிட்டனின் தென்கீழ்க் கோடியில் உள்ள லாயனிஸ் சென்றதும் மேலும் பின்வாங்க இடமின்றி இறுதிப் போராட்டத்தில் முனைந்து நின்றான்.

போருக்கு முந்திய இரவில் ஆர்தர், ஒரு கனவு கண்டார். அதில் கவெயின் வந்து ஆர்தரிடம் லான்ஸிலட் வரும்வரை போரை நிறுத்தி வைக்கும்படி கோரினதாகக் கண்டு விழித்தார். பெடிவீயர்59 முதலிய நண்பருடன் கலந்தபின் அதுவே நன்றெனக்கொண்டு மாட்ரெட்டுக்குச் செய்தி அனுப்பினார். மாட்ரெட்டுக்கும் தாமதம் செய்வது தனக்கு நல்லதென்றே தோன்றிற்று. பிரிட்டனில் பல பகுதிகளிலிருந்தும் உதவிப் படைகள் அனுப்பும்படி அவன் நண்பர்களை வேண்டியிருந்தான். ஆகவே, அவனும் போர் நிறுத்தத்துக்கு இசைந்தான்.

ஆயினும் இப்போர்நிறுத்தம் பாம்புக்கும் கீரிக்கும் ஏற்பட்ட போர் நிறுத்தம்போலவே இருந்தது. இரு தரப்பாரிடமும் உள்ள வெறுப்புடன் எதிரி சூழ்ச்சியால் நம்மை ஏமாற்றிவிடுவானோ என்ற ஐயமும் நிறைந்து இருந்தது. இந்நிலையில் மாட்ரெட்டும் அவன் நண்பரும் ஆர்தர், அவர் நண்பர்கள் ஆகியவர்களுடன்