பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 40

ஆர்தர்:அப்படியா! எறிந்தபோது நீ என்ன கண்டாய்?

ஏழை பெடிவீயர் இக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நீ கண்டதை வந்து கூறு என்ற சொல்லின் குறிப்பையும் அவர் உணரவில்லை. ஆகவே, மனக் குழப்பமடைந்து பின் ஆர்தருக்கு ஏற்றபடியே பேச எண்ணி, 'நான் கண்டது வேறெதுவுமில்லை. அலைகள் கரையில் மோதுவதையும் எக்ஸ்காலிபர் வீழ்ந்த இடத்தில் குமிழிகள் எழுவதையும் மட்டுமே கண்டேன்!” என்றார்.

ஆர்தர் சினங்கொண்டு, “நான் பிரிட்டனை இழந்தேன். ஆட்சியையும் நண்பரையும், மனைவாழ்வையும் இழந்தேன். என் இறுதி நண்பன் வாய்ம்மையையும் இழக்கவா வேண்டும்?” என்று வருந்தி, 'இச் சிறு பொருளை எண்ணி என் சொல்லி மறுக்கத் துணிந்து நீ இனி யாது செய்யத் துணியாய்? பொருளாவல் பொல்லாதது” என்று இடித்துரைத்தார்.

அது பொறாத பெடிவீயர் மீட்டும் வெளிச்சென்று வாளையெடுத்தான். அதன் கண்ணைப் பறிக்கும் மணிகள் அவனுறுதியை மீண்டும் கலைத்தன. “நான் சற்று வழவழ என்று பேசி ஆர்தர் மனத்தில் ஐயத்தை உண்டு பண்ணிவிட்டேன். இனித் துணிந்து கூறுவேன்" என்று எண்ணுக் கொண்டு பெடிவீயர் மீண்டும் வாளைப் புதைத்துவைத்துவந்து முன்போலவே கூறினான்.

இத்தடவை சினத்தால் ஆர்தர் உடலெல்லாம் பட படத்தது. “எனக்கு ஒரு நண்பர் மீதி என்ற எண்ணமும் போயிற்று.என் இறுதி முயற்சியில் நான் இறந்தாலும் கேடில்லை. நானே சென்று வாளை எறிந்து வருகிறேன்” என்று எழத் தொடங்கினார்.

பெடிவீயர் அவர் காலில் வீழ்ந்து, 'பெருந்தகையோய்! மன்னித்தருள்க! என் சிறுமையையும் கோழைமையையும் பொறுத்தருள்க. தாங்கள் எழ வேண்டா; அக் கொடுமைக்கு நான் ஆளாகக்கூடாது. இதோ நானே சென்று வாளை எறிந்து வருகிறேன்” என்று சென்றார்.

இரண்டு மனிதர் சேர்ந்து தூக்கவேண்டும் என்ற அளவில் பளுவுடைய அவ்வாளைப் பெடிவீயர் எடுத்துச் சென்று முழு வலிமையுடன் தலையைச் சுற்றிச் சுழற்றி வீசியெறிந்தான். அப்போது முழுநிலாக் காலமாதலின் நிலவொளியில் அவ் வாள் ஒரு பேரொளிப் பிழம்புபோல் ஒளிர்ந்தது. பெடிவீயர் வியப்பும்