பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 40

ஆனால், சைக்கீ அவ்வாறு செய்யக்கூடாது என்று தந்தையைத் தடுத்துவிட்டாள்.. “நான் பூதத்திடம் சிக்கிக் கொடிய வேதனையுடன் மடிந்தாலும் அது பொருட்டல்ல; நம் நாட்டு மக்கள் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ்வதுதான் பெரிது; அதுவே எனக்கும் மகிழ்ச்சியைத் தரும். தரும். சைக்கீயின் கோழைத்தனத்தால் மக்கள் எல்லாரும் மடிந்தார்கள் என்ற பழி எனக்கு வரக் கூடாது” என்று அவள் கூறினாள்.

தள்ளாமை மிக்க அரசனுக்குத் தன் மகளை இழக்கவே மன மில்லையாகையால், அவன் அதற்கு ஒருப்படவில்லை. அரசனின் போக்கால் தங்கள் உயிருக்கு ஊறு வரும் என்று அஞ்சிய அந்நாட்டு மக்கள் ஆயிரம் ஆயிரமாய்த் திரண்டு வந்து, அப்பாலோ கூறியதுபோல் சைக்கீ பூதத்திடம் போக வேண்டியது தான் என்று வற்புறுத்தினார்கள். எனவே, அன்று பிற்பகலில் சைக்கீ களைத்துப்போய் உறங்கும்போது, அவள் தாதியர் அவளை மணப்பெண்போல் அணிசெய்தனர்; அவளை விட்டுப் பிரிய மனமில்லாதிருந்தும் நாட்டின் நன்மையை நினைத்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே அவளுக்குப் பொன்னாடை களையும், அணிகளையும், மலர்களையும் அணிவித்தனர். அவள் விழித்தெழுந்ததும் அவள் தெய்வ மணமகள்போல் விளங்கினாள். மாலையில் அவர்கள் அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்று ஊருக்கு நெடுந்தொலையிலிருந்த கடற்கரைப் பெரும்பாறைக்குக் கூட்டிவந்து அங்கேயே விட்டுவிட்டு அழுது அரற்றி அவளிடம் பிரியமுடியாமல் விடைபெற்றுப்போனார்கள்.

அவர்கள் போகும்வரையில் தன் கடமை உணர்ச்சி காரணமாக நெஞ்சுறுதியுடன் இருந்த சைக்கீக்கு யாரும் எதிர்ப்படாத தனிமையில் இருக்கும்போது அச்சம் ஏற்படத்தான் செய்தது. தன்னைப் பிடிக்க வரும் கடற்பூதத்தை நினைத்துப் பார்த்ததுமே அவள் உடல் நடுங்கியது; பொறிகலங்கிய நிலையில் அவள் உணர்விழந்து விழுந்து விட்டாள்.

நடந்தவைகளை எல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கியூப்பிட், “செபிரஸ்” என்னும் தென்றல் காற்றை அழைத்து, சைக்கீயை அப்பாறை உச்சியிலிருந்து வாரி எடுத்து நீண்ட தொலையில் உள்ள பைம்பொழில் ஒன்றில், தேன் சொரியும் மலர்கள் நிறைந்த பசும்புல் வெளியில் படுக்கவைக்கு