பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

95

அரோராவும் டிதோனசும் ஒருநாள் காலையில் முத்துத் தலைவாசல் அருகில் எதிர்ப்பட்டனர். அழகொளி வீசும் அவள் எழில் முகத்தைக் கண்டதும் டிதோனசின் உள்ளம் விரைந்து துடித்தது. நெஞ்சு நெகிழ்ந்தது. அரோராவுக்கும் அவனது உடற்கட்டும் தோற்றப் பொலிவும் வியப்பையும் மகிழ்வையும் அளித்தன. அவள் அவனைப் பார்த்துப் புன்னகை பொழிந்தாள்; அவன் மீது அன்புற்றாள்.

அன்று முதல் டிதோனஸ் தன் களியாட்டங்களை மறந்து அவளது வருகையையே எதிர்நோக்கி நின்றான். பலநாள் அவர்கள் இவ்வாறு எதிர்ப்பட்டு அளவளாவி மகிழ்ந்தபின் ஒருநாள் டிதோனஸ் அரோராவிடம், “நீ என் மனைவியாக இருப்பாயா?” என்று கேட்டான்.

66

"ஆகட்டும். நீ என்னுடன் வந்து மேலைக் கடலில் உள்ள என் தீவில் வாழலாம் வா,” என்று அரோரா கூறினாள்.

66

"ஆனால், நான் ஒன்றை மறந்துவிட்டேனே,” என்று அவள் காதலன் கூறினான். “நான் முதியவனாகி இறந்து போவேனே! நாம் இருவரும் சில ஆண்டுகள்தானே ஒன்றாக வாழமுடியும்,’ என்று மேலும் வருத்தத்துடன் கூறினான்.

""

“நான் தெய்வங்களின் தந்தையான சீயஸ் பெருமானிடம் வேண்டி உனக்குச் சாவாவரம் வாங்கித் தருகிறேன்" என்று அரோரா கூறினாள்.

சீயஸ் பெருமானும் டிதோனசுக்கு இறவா வரமளித்து விட்டான். அரோரா டிதோனசைத் தன் அழகான தீவுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அளவிலா அன்புடன் காதலித்தனர்.

ளமை

ஆனால், அந்தோ! காலம் செல்லச் செல்ல டிதோனசு முதியவனாகிக் கொண்டு வந்தான். அரோரா அவனுக்குச் சாவா வரம்தான் கேட்டுப் பெற்றாளே தவிர, என்றும் மாறாமலிருப்பதற்கான மூவா வரம் கேட்கவில்லை; மறந்து விட்டாள். எனவே, ஆண்டுகள் பல ஆனபோது டிதோனசு வலுவிழந்து, உடல் தளர்ந்து, நரைத்துத் திரைத்துக் கிழமாகி வந்தான்.