பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

97

எனவே, அவள் அவனை மீண்டும் பூவுலகிற்கே இட்டு வந்து, வெட்டுக்கிளியாக உருமாற்றி அங்கேயே விட்டுச் சென்றாள்.

நீங்கள் பொழுது விடியும்போது தாமரை இதழ்போல் சிவந்த வைகறை வானத்தைப் பார்த்ததும் அரோராவை நினைத்துப் பாருங்கள்; செந்தழல் வண்ணப் போர்வை போர்த்து, பொன்னிறத் தேரேறி, முத்துத் தலைவாசலைக் கடந்து அவள் வருவதை எண்ணிப் பாருங்கள். புல் வெளியில் கிரீச், கிரீச் என்று பச்சை வெட்டுக்கிளி இரையும்போது அரோராவின் கணவனான டிதோனசை நினைவுகொள்ளுங்கள்.

கிரேக்கர்கள், இரவில் தண்ணொளி வீசி எல்லாரையும் மகிழ்விக்கும் வெண்மதியைப் பெண்ணாக உருவகித்து அவளை டயானா என்று குறிப்பிட்டு வந்தார்கள். டயானா ஒரு வேட்டுவப் பெண்ணாக அவர்கள் கண்களுக்குத் தோன்றினாள். அவள் கையில் வெள்ளியினாலான வில் ஒன்று இருக்கும். அவள் அம்புகள் வெள்ளி முனை படைத்தவை. டயானாதான் வேட்டைத் தொழிலுக்கு இறைவி. வேட்டையாடுவதற்கு வசதியாகச் சல்லடம் கட்டுவதுபோல் அவள் ஆடை தொடைவரையில்தான் தொங்கும். அவள் முதுகில் அம்புக்கூடு தொங்கும். வேட்டைத் தலைவி என்ற முறையில் அல்லாமல், நிலவுத் தெய்வம் என்ற முறையில், அவளை நீண்ட, இருண்ட நிற அங்கி தரித்த ஒரு பெண்ணாக அவர்கள் கருதி வந்தனர். அவள் மேலாடை நெடுக விரிந்து பரவிக் கிடக்கும். அந்த ஆடை முழுவதிலும் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிவீசும். அவள் நெற்றியில் இளம்பிறை திகழும். இந்த அழகு வர்ணனை, நட்சத்திரங்கள் மின்னும் இராக்கால வானத்தை நம் அகக் கண்முன் கொண்டு வருகிறதல்லவா?

டயானா அழகும் எழிலும் நிறைந்த ஒரு தெய்வமகள். தன் தோழியரைவிட அவள் ஒரு பிடி உயரமானவள்.நீரணங்குகளும் மரக்கன்னியருமே அவளுக்குத் தோழிகள். டயானா வேட்டை மீது செல்லும்போது அவர்கள் தங்கள் உறைவிடங்களைவிட் நீங்கி வந்து அவளுடன் சேர்ந்து, வேட்டைக்குச் செல்வார்கள்; அல்லது அவள் பச்சை வயல்வெளிகளில் ஆடிப்பாடி அகமகிழும்போது அவளுடன் சேர்ந்து ஆடிக் களிப்பார்கள்.