பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் 40

-

சில சமயங்களில் டயானா தன் அண்ணனான அப்பா லோவுடன் சேர்ந்து கடற்குதிரை மீது அமர்ந்து, கடலலைகள் காலில் தண்ணீர் சொரிவதைப் பார்த்து மகிழ்வாள்.

ஒருநாள் அப்பாலோ கடலில் தென்பட்ட கருநிறப் பொருள் ஒன்றை அவளுக்குச் சுட்டிக் காட்டினான்.

66

‘அதை நீ உன் ஒரே அம்பால் ஊடுருவி அடித்து விடு பார்க்கலாம்; உன்னால் அது முடியவே முடியாது,” என்று அப்பாலோ டயானாவிடம் கூறினான்.

L

அப்பாலோவுக்கு அந்தக் கருநிறப் பொருள் என்ன என்பது நன்றாகத் தெரியும். அது ஓரியன் என்னும் ஒரு பூதகணத்தவனின் தலை. ஓரியன் கடலுக்கு இறைவனான நெப்டியூனின் மகன். கடலில் நடந்து செல்லும் பேராற்றலை நெப்டியூன் தன் மகனான ஓரியனுக்கு வழங்கியிருந்தான்.

அப்பாலோவுக்கு ஓரியன்மீது பொறாமை இருந்து வந்தது. ஓரியன்,டயானாமீது அன்புகொண்டிருந்தான். அவன் அடிக்கடி கடலைக் கடந்துவந்து அவளைக் கண்டு போவான். அப்படி வரும்போது அவன் தன் தலைமட்டிலும் கடல் அலைக்கு மேலே தெரியும்படி நடந்து வருவான். ஆனால், அன்று, நெடுந் தொலையில் வந்த ஓரியனை டயானாவினால் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, தன் அண்ணன் தன் வில் வல்லமையைப் பழிப்பதுபோல் கூறிய சொற்களைக் கேட்டதுமே அவள் வில்லை முடுகி இழுத்து 'விர்' என்று விட்ட அம்பு ஓரியனின் தலையைத் துளைத்துச் சென்றுவிட்டது.

தான் என்ன கொடுமை இழைத்துவிட்டோம் என்பது அவளுக்கு உடனே பிடிபடவில்லை; பிணமாகிவிட்ட ஓரியனை அலைகள் அவள் காலடியிற்கொண்டு ஒதுக்கிய பின்தான் அவள் அதை உணர்ந்தாள். ஓரியனின் நாய் சிரியஸ் ஓடிவந்து ஓலமிட்டு, அவன் உடலைப் பரிவுடன் முகர்ந்து, நக்கி, வளைய வளையச் சுற்றி வந்த காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

"ஐயோ, சிரியசே! நீ உன் தலைவனை இவ்வுலகில் இழந்து டைவிடாமல் அவனுடன் வானத்தில் விண்மீனாக விளங்குவாய்,” என்று டயானா தேறுதல் கூறி வாழ்த்தினாள்.

விட்டாய், ஆனால், நீ என்றும்