பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

99

டயானா ஓரியனை விண்மீன் மண்டலத்தில் என்றும் விளங்கும்படி செய்துவிட்டாள். அவள் ஆணைப்படி ஓரியனின் நாய் சிரியசும், அவனது வாளும், இடுப்புக் கச்சையும் அவனுடன் விண்மீன்களாக இன்றும் விளங்குகின்றன.

L டயானா எத்துணை ஆற்றல் படைத்த பெருந்தெய்வம் என்பதை நீங்கள் இக்கதையிலிருந்து தெரிந்து கொண்டிருப் பீர்கள். அவள் உலக மக்களுக்கு உற்ற துணைவி. ஆனால், அவளைப் பகைத்தவர்களுக்கு அவள் மிகவும் பொல்லாத எதிரி.

ஆகமெம்னன் என்னும் கிரேக்க மகன் ஒருவன் டயானாவுக்குத் தனி உரிமையுள்ள ஒரு காட்டில் வாழ்ந்த கலைமான் ஒன்றைக் கொன்று அவள் சினத்துக்கு ஆளாகி விட்டான்.டயானாவின் சீற்றத்தைத் தணிப்பதற்கு ஆகமெம்னன் தன் அருமை மகளான இHஜீனியாவைக் காவு கொடுப்பது ஒன்றுதான் வழி என்று நிமித்திகக்காரர்கள் கூறினார்கள். ஆனால், ஆகமெம்னன் அதற்கு முதலில் இணங்கவே இல்லை; பலநாள் பிடிவாதமாக மறுத்து வந்தான். ஆனால், இறுதியில் வேறு வழியில்லாது போகவே அவன் அவளை அதற்கு ஒப்படைக்க இணங்கினான். அந்த இளநங்கையும் காலும் கையும் கட்டுண்டு பலிபீடத்தில் தலைவைத்துக் கிடந்தாள். அவள் தலையை வெட்டுவதற்குக் கத்தியையும் ஓங்கியாகிவிட்டது. ஆனால், அந்நொடியில் நிலவுத் தெய்வத்தின் நெஞ்சு இளகி விட்டது. அப்பெண்மீது அவள் இரக்கங்கொண்டாள். அவளை டயானா ஒரு மேகப்படலத்தில் மறைத்துச் சுற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அவளுக்குப் பதிலாக ஒரு மானை அவள் பலிபீடத்துக்கு அனுப்பி வைத்தாள்.

ஆனால், மற்றொருதடவை, ஆக்டீயன் என்னும் வேட்டுவச் சிறுவன் ஒருவன் தவறிழைத்தபோது அவள் இவ்வாறு பரிவுடன் நடந்துகொள்ளவில்லை. அவள் தன் தோழியருடன் ஒருநாள் ஒரு சுனையில் நீராடிக் கொண்டிருந்தபோது அவ்வேடன் ஒளிந்திருந்து பார்த்துவிட்டான்.

டயானாவுக்கே தனியுரிமையுள்ள காட்டுச் சுனையின் தெள்ளிய நீரில் அவளும் தோழியரும் நீரை ஏற்றி இறைத்து நீராடிக் கொண்டிருந்தனர். அச்சுனையைச் சுற்றி வளர்ந்திருந்த செடிகளின் இலைகள் திடீரென விலகி இடைவெளி தெரிந்தது.