பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

அப்பாத்துரையம் 40

-

அதன் வழியே ஓர் ஆண் மகன் உற்றுப் பார்ப்பதை அவர்கள் கண்டார்கள்.

ஒரு வேளை அவன் தெரியாத்தனமாக அப்படிப் பார்த்திருக்கலாம். ஆனால் மக்கள் தெரிந்து, வேண்டுமென்றே குற்றம் இழைத்தார்களா அல்லது தெரியாமலே பிழை செய்தார்களா என்பதைப் பற்றிக் கடவுளர் அக்கரைப்படுவ தில்லை.

டயானாவின் கண்கள் சீற்றத்தால் சிவந்தன. சிறிது நீரை வாரி அவன்மீது தெளித்து, 'ஓடிப்போ" என்று அவள் விரட்டினாள். ஆக்டீயோன் ஓடிச்செல்லும்போதே அவன் உடல் முழுவதிலும் மயிர் முளைத்து வந்தது; தலையில் கொம்புகள் கிளம்பின. சிறிது தொலைபோனதுமே அவனுக்கு, கைகளையும் கால்களையும் ஒருப்போல ஊன்றி ஓடினால் விரைவாகச் செல்லலாம் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதேபோல், அவனும் அக்காட்டினூடே ஒரு விலங்குபோல் விரைந்து ஓடினான்.

தனக்கு என்ன நேர்ந்துவிட்டது என்பதை அவன் முதலில் உணரவில்லை. ஒரு நீரோடை அருகில் வந்தவுடன் தண்ணீரில் தன் உருவத்தை அவன் கண்டான்.டயானா தன்னை ஒரு மானாக மாற்றிவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

சற்று நேரத்துக்குள் அவன் நாய்களே அவனை விரட்டத் துவங்கின. தான் யார் என்பதை அவைகளுக்கு அவனால் உணர்த்த முடியாமற்போகவே, அவை அவனை வேட்டையாடிக் கொன்றுவிட்டன.

அந்நிகழ்ச்சி நடந்ததிலிருந்து கிரேக்க வேட்டைக்காரர்கள் டயானாவின் சுனைக்குப் பக்கத்தில்கூடச் செல்வதில்லை. எங்கேயாவது செடிகளுக்குப் பின்னால் பெண்கள் நீரை ஏற்றி இறைத்து விளையாடும் ஓசை கேட்டால், அவர்கள் தலை நிமிர்ந்து பாராமல் ஒதுங்கிச் சென்று விடுவார்கள்.

சினம் மூண்டால் டயானா இவ்வாறு கடுமையாக நடந்து கொள்வாளாயினும், இயல்பாக அவள் இரக்கமுள்ளவள் தான். கிரேக்க மாவீரன் ஹெர்க்யூலிஸ் ஆற்றிய பன்னிரு அருஞ் செயல்களுள் நான்காவது பணி டயானாவின் மானைப் பிடிப்ப தாகும். அம்மானை அவன் ஓராண்டு காலம் ஓடித் துரத்தினான்.