பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104 ||

அப்பாத்துரையம் - 40

ஏற்பட்டது. அத்தீனி அந்நகர் தன் பெயரால் வழங்க வேண்டு மென்றாள். நெப்டியூன் அது தன் பெயரால் வழங்க வேண்டுமென்றான்.

இருவரும் ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாமற் போகவே, நெப்டியூன் அதுபற்றி முடிவு கூறுமாறு மற்றத் தெய்வங்களைக் கேட்டுக்கொண்டான். உலகமக்களுக்கு மிக்க பயன் செய்யும் ஒரு பொருளை யார் பரிசாக வழங்குகிறார்களோ, அவர் பெயரே அந்நகருக்கு ஏற்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு கூறினார்கள்.

ஆணையால்

"நான் அவர்களுக்குக் குதிரையைக் கொடுக்கிறேன்,” என்று நெப்டியூன் கூறினான்; உடனே அவன் பூமியிலிருந்து ஓர் அழகான குதிரை தோன்றியது. அதுதான் உலகத்தில் வந்த முதலாவது குதிரை.

“நான் ஆலிவ் மரத்தைத் தருகிறேன்” என்று அத்தீனி கூறி, தன் கைத்தண்டால் நிலத்தைக் கீறினாள். உடனே ஒரு மரம் முளைத்தது.

66

“அத்தீனியின் பெயர்தான் அந்நகருக்கு வழங்கவேண்டும்,” என்று பிற கடவுளர்கள் முடிவு கூறினார்கள். “மரம் பசுமை யானது; செழிப்புக்கும் அமைதிக்கும் அது அறிகுறி; ஆனால், குதிரை போரைக் குறிக்கிறது; போரினால் அழிவுதான் ஏற்படும்,” என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அதன்பின் அத்தீனி அந்நகருக்கு ஆதென்ஸ் என்று பெயரிட்டாள்; அதையே நாம் ஏதென்ஸ் என்று கூறுகிறோம். நெப்டியூன் அடங்காச் சினத்துடன் தன் கடல் மாளிகைக்குச் சென்றுவிட்டான்.

ஏதென்ஸ் செழித்து வாழாது, பாழடைந்துவிடும் என்று நெப்டியூன் நம்பினான். ஆனால், அது புகழ் மிகுந்து விளங்கி, உலகின் தலைசிறந்த நகரமாகத் திகழ்ந்தது.

ஆயினும், குதிரையும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள விலங்கினமாகவே அமைந்தது. அதை நெப்டியூன் அமைதியுள்ள விலங்காகப் பழக்கி, அதன்மீது ஏறிச்செல்வது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தான். கிரேக்கர்கள் குதிரை பூட்டிய