பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

|---

அப்பாத்துரையம் - 40

அப்பாலோவுக்கு ஹையாசிந்தஸ் என்னும் மானிடச் சிறுவன் மீது அளவிலா அன்பு ஏற்பட்டது. அடிக்கடி அப்பாலோ பூவுலகுக்கு ஹையாசிந்தஸுடன் வட்டு வீசி விளையாடுவான். ஒரு நாள் அப்பாலோ வீசிய வட்டு ஹையாசிந்தஸ் நெற்றியில் பட்டு படுகாயம் உண்டு பண்ணிவிட்டது. ஆறாகக் குருதி கொட்டும் அச்சிறுவன் இறந்துவிடாமல் தடுப்பதற்காக, அவனை அப்பாலோ ஒரு மலர்ச்செடியாக மாற்றி அவன் உயிரைக் காப்பாற்றி விட்டான். செங்குருதி நிற ஹையாசிந்தஸ் மலர்கள் அப்பாலோவின் அன்பை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

பெர்செபோனீ நிலமகளின் புதல்வி. அவள் அழகிற் சிறந்தவள். அவள் அடர்ந்த கூந்தலும் நீலக் கருவிழியும் சிவந்த வாயும் இனிய மணிக்குரலும் வாய்ந்தவளாயிருந்தாள்.

கிரேக்கர் தெய்வங்கள் குடியிருந்த ஒலிம்பசு மலையில் அவளும் ஒரு பொன் மாளிகையில் வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால், அவள் உலகில் உள்ள மலர்ச்செடிகளையும் புல்வெளிகளையும் பைம்பொழில்களையுமே ஆவலோடு விரும்பினாள். அவளுடன் ஒத்த பிற தெய்வ மங்கையருடன் சேர்ந்து வாழும்படி அவள் தாயார் அவளைக் கேட்டுக் கொண்டதற்கு அவள் இணங்க மறுத்துவிட்டாள். தனக்கு மகிழ்ச்சி தருவது மண்ணுலகே என்று அவள் கூறினாள்.

66

“அம்மா, நீ விண்ணவர் உறைவிடமான ஒலிம்பசு மலையில் குடியிருந்தால் உனக்கு ஒரு கேடும் வராதே; அதுதானே நல்லது,” என்று அவள் தாயான டெமீட்டர் (பூதேவி) கவலையோடு கூறினாள்.

தன் செல்வக் குழந்தையைப் பாதுகாப்பதற்குத் தான் அருகில் இல்லாத நேரத்தில் அவளுக்கு ஏதேனும் ஊறு நேர்ந்துவிடுமோ என்று அவள் எப்போதும் அஞ்சி வந்தாள். டெமீட்டர் பெரும்பாலும் தன் ஒலிம்பசு மலை மாளிகையில்தான் இருப்பாள். மண்ணுலகுக்கு எப்போதோ ஒரு தடவைதான் வந்துபோவாள். அப்படி வருகிற நாட்களில் அவள் தன் அருமை மகள் பெர்செ போனீயுடன் இன்பமாகக் காலங்கழிப்பாள். பெர்சபோனீ சோலைகளிலும் புல்வெளிகளிலும் கடற்கரை களிலும் ஓடி ஆடி மகிழ்வாள்.