பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

111

'இனி நான் மனித உருவம் எடுத்து உலக மாந்தரிடையே சென்று தேடுகிறேன். அவர்களாவது ஏதேனும் குறிப்புத் தரக்கூடும்,” என்று டெமீட்டர் முடிவு செய்தாள்.

உடனே அவள் நரைத்துத் திரைத்த மூதாட்டி போல் ஓர் உருவமெடுத்தாள். கிரேக்க நாட்டில், அட்டிக்கா என்ற பகுதியில் உள்ள ஓர் ஊரில் ஒரு கிணற்றுக்கருகில் கிடந்த பாறைமீது அவள் வந்து அமர்ந்தாள். மாலைப்பொழுதில் சில பெண்கள் தண்ணீர் இறைப்பதற்காகப் பித்தளைக் குடங்களுடன் அங்கே வந்தனர். அருகில் கிழவி இருந்ததை ஒருத்தி பார்த்தாள்.

"ஐயோ, ஏழை, தொண்டு கிழவி! ஏன் இவள் இப்படி இங்கே உட்கார்ந்திருக்கிறாள்?" என்று அவள் கேட்டாள்.

"அம்மா, இளவரசி, என்மீது சற்று இரக்கங்கொள். உன் தந்தை அரண்மனையில் நான் தங்குவதற்கு ஒரு சிறு இடமாவது தரமாட்டாயா?” என்று டெமீட்டர் கேட்டாள்.

"நாங்கள் இளவரசிகள் என்பது உனக்கு எப்படித் தெரியும்?" என்று அப்பெண் வியப்புடன் வினவினாள்.

66

'கிழவிகளுக்கு எல்லாம் தெரியும்; அதில் வியப்பு ஒன்றுமில்லை. அது சரி; நீ போய் உன் தாயான அரசியிடம் கூறி எனக்கு ஏதேனும் ஒரு வேலை பார்த்துத் தா; பட்டத்து அரசிக்கு எத்தனையோ தாதியரும் பணிப் பெண்களும் வேண்டியிருக்குமே; நான் எனக்குத் தரும் வேலையை ஒழுங்காகவும் உண்மையாகவும் செய்வேன்," என்று அக்கிழவி கூறினாள்.

இதைக்கேட்ட இளவரசி அவள்மீது பரிவு கொண்டு உடனே தன் தாயிடம் சென்று, நடந்ததை உரைத்து அவள் பதிலையும் தெரிந்துவந்து சொன்னாள்.

"பச்சிளம் குழந்தையான என் தம்பி இளவரசனை வளர்க்க ஒரு தாதி வேண்டும்; அவனுக்கு அவ்வப்போது பாலுட்டி அவனைச் சீராட்டி உறங்கவைக்க வேண்டும்; அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ளக்கூடுமானால், எங்களுடன் நீ அரண்மனைக்கு வா," என்று இளவரசி கூறினாள்.

டெமீட்டரும் அதற்கு ணங்கி, அவர்களுடன் அரண்மனை சேர்ந்தாள். ஏழை எளியவரிடம் அன்பு காட்டி