பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




---

112 ||_

அப்பாத்துரையம் - 40

நடக்கவேண்டும் என்று நன்கு கற்றறிந்த அந்த இளவரசிகள் அவளைத் தங்களுடன் உண்ண அழைத்தனர்.

66

"வேண்டாம் அம்மா, உங்கள் உணவு எனக்கு ஏற்காது. ஒரு வேலைக்காரியிடம் சிறிது மாவும் தண்ணீரும் கொடுத்து அனுப்புங்கள்; நான் கூறுவதுபோல் அவள் அதை உணவாகச் சமைத்துத் தரட்டும்; அதுவே போதும்," என்று டெமீட்டர் கூறிவிட்டாள்.

அவள் கூறியதுபோலவே ஏற்பாடு செய்யப்பட்டது. அவளும் மாலைநேரம் முழுவதும் குழந்தையை எடுத்துவைத்துக் கொண்டு சீராட்டினாள்.

ரவில் எல்லாரும் உறங்கிய பிறகு, அவள் அக்குழந் தையை எடுத்துச்சென்று கணப்புமாடத்தில் எரியும் நெருப்பின் நடுவே வைத்தாள். அக்குழந்தை அழவுமில்லை; நெருப்புத் தழலினால் துன்புறவும் இல்லை. மலர் மெத்தையில் படுத்திருப்பதுபோல் அது சிரித்துக் கொண்டே படுத்திருந்தது; நெருப்பு அக்குழந்தையைச் சுடக்கூடாது என்று அத்தெய்வமகள் தடுத்திருந்தாள்.

"கண்ணே, செல்வக் குழந்தாய், பகலில் நான் தரும் அமிழ்தத்தை அருந்து, இரவில் நெருப்பில் படுத்துறங்கு; இவ்விரண்டும் உனக்கு அழியாத உடம்பைத் தந்துவிடும். நீயும் தெய்வங்களைப்போலவே இறவாத நிலையைப் பெற்று விடுவாய்,” என்று டெமீட்டர் கூறினாள்.

பகலில் அவள் அக்குழந்தைக்கு ஒன்றுமே ஊட்ட மாட்டாள். அதன் உடம்பெல்லாம் அமிழ்தத்தைத் தடவி உருவி விடுவாள்; இரவில் அதை அவள் நெருப்பில் கிடத்திவைப்பாள்.

ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தை அதிக வலுவும் அழகும் பெற்று வளர்ந்துவந்தது. அரசன் அதுகண்டு அளவிலா மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டான். அத்தனை வலுவான குழந்தை அந்நாட்டில் வேறு எதுவுமே இல்லை என்று அவன் உறுதியாகக் கூறினான்.

“நீ குழந்தைக்கு ஒன்றுமே ஊட்டுவதில்லையாமே? அது உண்மையா?" என்று அரசன் ஒருநாள் டெமீட்டரிடம் கேட்டான்.