பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

113

"நீ அதைக்குறித்து என்னிடம் ஒன்றும் கேட்கக் கூடாது, என்று டெமீட்டர் பதில் சொன்னாள்.

"ஒவ்வொரு நாள் மாலையிலும் குழந்தையை ஏதோ ஒரு மாயவேலைக்காகக் கணப்புமாடத்துக்கு எடுத்துச் செல் கிறாயாமே, அது உண்மையா?" என்று அவன் மேலும் வினவினான்.

66

'அரசே, நீ அதைக்குறித்தும் என்னை யாதும் கேட்கக் கூடாது,” என்றாள் அவள்.

"சரி, அது போகட்டும்; நீ வளர்த்துள்ள குழந்தைகள் எல்லாவற்றிலும் என் குழந்தைதானே அழகிற் சிறந்தது? அதையாவது கூறு,” என்று மன்னன் பெருமிதத்தோடு கேட்டான்.

“என் மகள் இதைவிடப் பன்மடங்கு அழகுள்ளவளாக இருந்தாள்; ஆனால் அவளை நான் இழந்துவிட்டேன்,” என்று டெமீட்டர் வருத்தத்துடன் கூறினாள்.

இப்பேச்சுகளைக்

கேட்டுக்கொண்டிருந்த

அரசி மன்னனிடம், “இன்றிரவு நான் கணப்புமாடத்தருகில் சென்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிடுகிறேன்,” என்று தனிப்படக் கூறினாள்.

"வேண்டாம், ஒருவேளை இவள் ஒரு தெய்வமோ என்னவோ, நீ ஏதாவது செய்து அவளுக்குச் சினமூட்டி விடப்போகிறாய், வேண்டாம்,” என்று அரசன் அவளுக்கு அறிவுறுத்தினான்.

ஆனால், அரசியால் தன் ஆவலை அடக்க முடியவில்லை. அன்றிரவு அவள் கணப்புமாடமிருந்த கூடத்துக்கு மெல்லமெல்ல அடியெடுத்து வைத்துச் சென்றாள்.

கணப்புமாடத்தருகில் குழந்தையுடன் நின்ற கிழவி தன் காலால் தீயைக் கிளறிக்கொடுத்து, கொழுந்துவிட்டெரியும்படி செய்து, குழந்தையை அந்நெருப்பில் படுக்க வைத்தாள். துணுக்குற்று அச்சம் மேலிட்ட அரசி, “ஓ” என்று அலறி

விட்டாள்.

அந்த நொடியிலேயே கிழவியின் கூனல் நிமிர்ந்தது; அவள் உருவம் உயர்ந்தது; தன் தெய்வத் திருவழகுடன் டெமீட்டர் அரசியைத் திரும்பிப் பார்த்தாள். திகைப்படைந்த அரசி