பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் 40

-

114 ||. வாய்திறப்பதற்குள், அவள் குழந்தையை நெருப்பிலிருந்து எடுத்துத் தரையில் படுக்கவைத்தாள்.

"நான்தான் டெமீட்டர் என்னும் பெயருள்ள பூதேவி; உன் மகனை அழியாத உடம்புள்ளவனாக்கி இறவாதநிலை பெறும்படி செய்திருப்பேன்; உன் ஆவல் துடிப்பால் அதை நீ கெடுத்துவிட்டாய்," என்று டெமீட்டர் அரசியிடம் கூறினாள்.

தான் செய்த பிழையை உணர்ந்த அரசி டெமீட்டர் முன் மண்டியிட்டு வணங்கி மன்னிப்பு வேண்டினாள். டெமீட்ட ரோவெனில், தன்னால் இனி அக்குழந்தையை வளர்க்க முடியாது என்றுகண்டிப்பாகக் கூறிவிட்டு,அரண் மனையிலிருந்து நீங்கினாள்.

அந்த ஆண்டில் ஒரு பயிருமே விளையவில்லை. டெமீட்டர் தன் மகள் பெர்செபோனீயைக் காணாத துயரத்தால் மேலும் வருந்தினாள். அவள் முகத்தில் சிரிப்பே தோன்றாதபடியால், கதிர்களில் மணி பிடிக்கவுமில்லை; மரத்தில் கனிகள் காய்க்கவும் ல்லை. உலகமெங்கும் பஞ்சம் வந்துவிடுமோ என்று பிற தெய்வங்கள் அஞ்சின. ஒலிம்பசு மலை மாளிகைகளிலிருந்த அத்தனை தெய்வங்களும் அவளுக்குச் செய்திவிடுத்தனர்.

“என் மகள் பெர்செபோனீயை எனக்கு மீட்டுத்தரும் வரையில் உலகில் விளைச்சலே இராது." என்று டெமீட்டர் கூறிவிட்டாள்.

வேறு ஒரு வழியுமில்லாதபடியால், அத்தெய்வங்கள் ஏடீஸ் மன்னனுக்குச் செய்திவிடுத்து, பெர்செபோனீயை அவள் தாயிடம் சேர்ப்பிக்கும்படி அவனிடம் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையில் பெர்செபோனீ, ஏடீசின் மனைவியாகி விட்டிருந்தாள். பாதாள உலகில் அவள் ஏடீசுடன் அரியணை யிலமர்ந்து கொலுவிருந்தாள்.முன்னிலும் மிகுந்த பேரெழிலுடன் அவள் விளங்கினாள். ஆனால், அவள் அங்கே மகிழ்ச்சி யுடனிருந்த நாளே கிடையாது.

தெய்வங்கள் விடுத்த செய்தியுடன் ஹெர்மீஸ் என்னும் தூதுவன் ஏடீசிடம் வந்தான். பெர்செபோனீயை ஏடீஸ் திருப்பியனுப்பிவிட வேண்டும் என்ற செய்தியைக் கேட்டதுமே, அவளும் அவனை அதற்கு இணங்கும்படி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டாள்.