பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

115

ஹெர்மீஸ் களிததும்பும் முகத்துடன் விளங்கிய ஓர் இளைஞன். அவன் காலிலும் மகுடத்திலும் வெள்ளிச் சிறகுகள் முளைத்திருக்கும். மின்னல் பாய்ந்தாற்போல் ஹெர்மிஸ் பாதாள உலகுக்கு வந்தபோது, அவளுக்கு உலக நினைவுகள் மீண்டும் ண்டாயின. பூவுலகில் கதிரவன் ஒளிவீசும் காட்சியும் மலர்கள் அழகுறப் பூத்திருப்பதும் அவள் கண்முன் தோன்றின.

தான் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவள் துடித்தாள்.

ஏடீசும் அவளைப் போகவிடுத்தான். சிறிதுபொழுதில் அவள் தன் தாயை அடைந்து அவளைத் தழுவிக் கொண்டு நின்றாள்.

“அம்மா, பெர்செபோனீ! நீ பாதாள உலகில் இருக்கையில், எதையாவது தின்றுவிடவில்லையே?” என்று டெமீட்டர் கேட்டாள்.

“ஏன் அம்மா!”

66

“அங்கே எந்த உணவையாவது உண்டவர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள்; அதற்காகத்தான் கேட்டேன்,” என்றாள் டெமீட்டர்.

"ஐயோ, அப்படியா அம்மா? என் கணவர் தந்த நான்கு மாதுளை அரிசியை நான் தின்றுவிட்டேனே," என்று பெர்செபோனீ பதட்டத்துடன் கூறினாள்.

அதைக் கேட்ட டெமீட்டர் மீண்டும் ஒலிம்பசுத் தெய்வங்களிடம் முறையிட்டாள்.

66

என் குழந்தையை இனிமேலாவது என்னிடமிருந்து பிரிக்காதீர்கள்,” என்று அவள் கூறினாள்.

“ஏடீஸ் வந்து அவளை அழைத்தால், அவள் போகத்தானே வேண்டும்; அவள்தான் மாதுளை அரிசியைத் தின்றுவிட்டிருக் கிறாளே,” என்று அவர்கள் கூறினார்கள்.

"தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தானே அவள் அவ்வாறு செய்துவிட்டாள்; பெர்செபோனீ மீண்டும் டெமீட்டரைப் பிரிந்தால் விளைச்சலே இராதே” என்று மற்றொரு தெய்வம் எடுத்துக் காட்டியது.