பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

119

ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று பயிர்களை அழித்துப் பெருந்தொல்லை கொடுத்து வந்தது.

மினாஸின் நண்பர்களுள் டேடலஸ் என்ற ஒரு அறிவிற் சிறந்த சிற்பி இருந்தான். மினோட்டாரின் அழிவு வேலையைக் கட்டுப்படுத்த அவன் தன் தலையைப் பயன்படுத்தி 'மருட்கோட்டம்' என்ற ஒரு திறந்த சிறைக்கோட்டம் அமைத்தான். அதன் வெளிவாயில் கவர்ச்சிகரமாகச் செய்யப்பட்டிருந்தது. அதனுள்ளே சென்றவன் திரும்பவும் வாயில்கண்டு மீளமுடியாது. பாதைகள் பலவாகக் கிளைத்தும் சேர்ந்தும் வளைந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் சுற்றிச்சுற்றி இட்டுச்சென்றன. தோட்டங்கள், வாவிகள், குன்றுகள், புதர்கள், காடுகள் எல்லாம் உள்ளே எப்படியோ இடம்பெற்றன. உட்சென்றவர் சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்துத் திரிவர். மீளும் எண்ணம் வந்தாலும் மீளமுடியாது அலைவர்.

மினோட்டார்

இந்த வாயிலினுள் நுழைந்தபின் எதிர்பார்த்தபடியே வெளிவர முடியாமல் சுற்றிச் சுற்றித் திரிந்தது. னால், அதன் அழிவுவேலைக்கு இரையாக அரசன் தன் பகைவர்களை அடிக்கடி அதனுள் செல்லும்படி தூண்டி அதன் கொடுஞ்செயல்களுக்குத் தூண்டுதல் தந்தான். அத்துடன் அவ்வப்போது அக்கோட்டத்தின் தன்மையறியாமல் அதன் அழகில் சிக்கி வேடிக்கை பார்க்க உட்சென்றவர்களும், உள்ளே திரிந்து வெளிவர முடியாமல் மினோட்டாருக்கு இரையாயினர். இது தவிர, ஆண்டுதோறும் அதற்குப் புத்தம் புதிய இரையளிக்க ஒரு தறுவாயும் மினாஸுக்கு ஏற்பட்டது.

மினாஸின் மூத்தபுதல்வன் அண்ட்ராசியூஸ் சிறந்த வீரன். அதேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் கேளிக்கைகளில், தொடர்ச்சியாக எல்லாக் கேளிக்கைகளிலும் அவனே பரிசு வாங்கினான். அதேனிய மக்கள் எவருக்கும் பரிசு கிடைக்காமல் போயிற்று.இதுகண்டு அதேன்ஸ் அரசன் ஈஜியஸ் மனம்புழுங்கிப் பொறாமை கொண்டு அவனைக் கொன்றுவிட்டான். இது கேட்ட மினாஸ் வெகுண்டு, அதேன்ஸ்மீது படையெடுத்து அதைப் பணியவைத்தான். தோற்ற நகரத்தார் மினோட்டாருக்கு இரையாக ஆண்டுதோறும் ஏழு இளைஞரும் ஏழு இளநங்கை யரும் அனுப்பவேண்டுமென்று அவன் கட்டளையிட்டான்.