பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

அப்பாத்துரையம் - 40

பல

தீஸியஸ் தன் வெற்றியால் செருக்கடைந்து ன்னல்களை வருவித்துக்கொண்டான். அரியட்னே போன்ற அறிவுடைய வெளிநாட்டுப் பெண்ணுடன் வாழ அவன் மனம் இடந்தரவில்லை. வழியில் அவர்கள் ஒரு தீவில் தண்ணீர் குடிக்க இறங்கினார்கள். அரியட்னே இளைப்பாறும் சமயம் தீஸியஸ் அவளை விட்டுவிட்டு வந்து விட்டான். அத்துடன் தந்தைக்கு அவன் கூறிய உறுதியை அவன் மறந்துவிட்டான். கப்பலில் வெள்ளைக்கொடிக்கு மாறாகக் கருங்கொடியே திரும்பி வரும் போதும் பறந்தது. கப்பல் தொலைவில் கடலில் வரும்போதே கரையிலிருந்து ஈஜியஸ் கருங்கொடியைக் கண்டான். கப்பல் கரைவரும்வரை காத்திராமல், மகன் இறந்துவிட்டான் என்ற வருத்தத்தால் அவன் உயிர் நீத்தான்.

காதலியைத் துறந்த பழி தந்தை உயிரைக் கொண்டதே என்று தீஸியஸ் கலங்கினான்.

தீஸியஸ் வாழ்க்கையின் தொடக்க வீரம் அவன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்திருந்தது. அவன் தொடக்கப் பிழைகள் அவன் உள்ளத்தில் ஆழ்ந்தமைந்து செயலாற்றும் அமைதியையும், அநீதி செய்ய அஞ்சும் தன்னடக்கத்தையும் வளர்த்தன. வீரச் செயல்கள் பல புரிந்து, நாட்டில் நல்ல சட்டதிட்டங்கள் வகுத்து, அவன் அதேன்ஸின் புகழைக் கிரேக்க உலகெங்கும், அதற்கு அப்பாலும், பரப்பினான்.

தொலை கிழக்கு நாடாகிய தமிழகத்தில் அன்று வீரமிக்க பெண்டிரே ஆட்சி செய்த பகுதி ஒன்று இருந்தது. அதனைக் கிரேக்கர்,பெண்கள் நாடு என்று கூறினர். அந்நாடுவரை தீஸியஸ் தன் வாள்வலியைக் கொண்டு சென்றான். ஆனால் வீரமிக்க அந்நாட்டின் பெண் படைகளை அவன் எளிதில் வெல்ல முடியவில்லை. இறுதிப் போரில் அந்நாட்டின் பெண்ணரசியான அந்தியோப்பியுடன் வாட்போர் செய்து வென்றான்.பின் அவன் அவளை மணந்துகொண்டு புதுப்புகழுடன் அதேன்ஸுக்கு வந்து ஆண்டான்.

தீஸியஸ் கதை அதேன்ஸின் புராணக் கதைகளுடன் கதையாயிற்று.