பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

||---

அப்பாத்துரையம் - 40

உண்பவர்கள் கிரேக்கர்கள் புகுந்த குகையிலுள்ள சைக்கிளப்ஸ் அவர்களைக் கண்டதும், இரண்டொருவரைப் பிடித்து, இரவு உணவுடன் வைத்து உண்டான். இதைக்கண்ட மற்றக் கிரேக்கர்களின் உடலின் எண்சாணும் ஒருசாணாகக் குறுகிற்று. தம்மை உள்ளே இழுத்துவந்ததற்காக அவர்கள் ஒடிஸியஸைத் திட்டலாயினர்.

உடல் வலிமையால் சைக்கிளப்ஸை வெல்ல முடியாது என்று ஒடிஸியஸ் கண்டான். அவன் மூளை வேலை செய்தது. அவன் ஒரு திட்டத்தை வகுத்தான்.

அந்தக்குகையிலுள்ள சைக்கிளப்ஸின் பெயர் பாலிஃவீமஸ். ஒடிஸியஸ் அவனுக்குத் தன்னிடமுள்ள தேறல் வகையில் சிறிது கொடுத்துக் குடிக்கச் செய்து நட்பாடினான். அந்த மகிழ்ச்சியில், பாலிஃவீமஸ் அவனைக் கூடிய மட்டும் கடைசியாகவே கொல்வதாக வாக்களித்தான். அத்துடன் நண்பனென்ற முறையில் அவன் ஒடிஸியஸின் பெயர் அறிய விரும்பினான்.

ஒடிஸியஸ் குறும்பாக, "என் பெயர் யாருமில்லை,'

என்றான்.

பாலிஃவீமஸ் அன்றுமுதல் அவனை 'யாருமில்லை!' என்றே அழைக்கத் தொடங்கினான். தம் நடுக்கத்திடையேகூட கிரேக்கர் அதுகேட்டுச் சிரித்தனர். ஆனால், அப்பெயரின் முழு நகைச்சுவையையும் அவர்கள் அப்போது அறியவில்லை.

""

ஓய்வு நேரங்களில் ஒடிஸியஸும் தோழர்களும் ஆடு மேய்க்கச் சைக்கிளப்ஸ் வைத்திருந்த கழிகளில் ஒன்றைக் கூராகச் சீவித் தீயில் வாட்டி வைத்துக் கொண்டனர். ஒருநாள் பாலிஃவீமஸ் உள்ளே வந்தபோது குகை வாயிலை அடைக்க மறந்துவிட்டான். அதற்காகவே காத்திருந்தனர் கிரேக்கர். அன்று உண்டு குடித்து அவன் படுத்தபின், அவர்கள் கூறிய கழியைத் தூக்கி அவன் ஒற்றைக் கண்ணில் குத்தி அழுத்திவிட்டனர்.அவன் சாகவில்லை. ஆனால், நோவு பொறுக்காமல் அலறிக்கொண்டு அவர்களைப் பிடித்து நொறுக்க நாலுபுறமும் தடவினான். கண் தெரியாத நிலையில் அவன் தன் உறவினர்களைக் கூவி அழைத்தான். கிரேக்கர் என்ன நேருமோ என்று குகையின் மூலைகளில் பதுங்கினர்.