பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

139

சென்றிருந்தது.பெண்களே முழுவதும் நிறைந்திருந்த லெம்னாஸ் தீவின் அரசியும், ஸிஸிகஸ்தீவின் அரசனும் அவர்களை வரவேற்று இனிது நடத்தினர்.

ஆயினும் தற்செயலாக வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சி பிந்தியத் தீவில் நிகழ்ந்தது. ஸிஸிகஸ் தீவின் அரசனிடமிருந்து விடைபெற்று அவர்கள் மீண்டபின் புயல் அவர்கள் கப்பலைத் திரும்பவும் ஸிஸிகஸ் தீவில்கொண்டு வந்தது. அப்போது இருட்டாயிற்று; தாங்கள் திரும்பவும் முன்பு விட்டுச் சென்ற தீவுக்கே வந்ததாக கிரேக்கர் அறியவில்லை. தீவிலுள்ள மக்களும் அவர்கள் தம் நண்பர்களென்பதை அறியாமல், யாரோ கொள்ளைக் கூட்டத்தினர் என்று நினைத்துத் தாக்கினர். கடுங் கைகலப்பு ஏற்பட்டது. அதில் தீவின் அரசன் இறந்தான். விடிந்து தம் பிழையை உணர்ந்த கிரேக்கர் மிகவும் வருந்தினர்.

மிஸியா என்ற தீவில் ஒரு நறுநீர் ஊற்றண்டை நீரருந்தச் சென்றபோது, ஜேஸன் தோழருள் ஒருவன் திடீரென மறைந்துவிட்டான். அவனை அவர்கள் எங்கும் தேடியும் காணாமல் திரும்பிச் சென்றனர். நீரூற்றினுள் வாழ்ந்த ஒரு நீரரமங்கை அவன் அழகில் சிக்கி, அவனை உள்ளிழுத்துக் கொண்டது அவர்களுக்குத் தெரியாது.

சில நாட்களுக்குப்பின் அவர்கள் அரக்கரிடையே அமிகஸ் என்ற பெயருடைய ஒரு மற்போர் வீரன் வாழ்ந்த பகுதியில் இறங்கினர். அவன் வந்தவர்களுடனெல்லாம் மற்போரிட்டான். அவர்கள் தோற்றால் அவர்களை மரங்களில் கட்டிவைத்து உணவில்லாமல் சாகடித்து வந்தான். கிரேக்கருள்ளும் பலர் இங்ஙனம் கட்டுண்டனர்.ஆனால், கிரேக்கருக்குள் பாலிடியூலஸ் என்ற சிறந்த மல்லன் இருந்தான். இதை

அமிகஸ்

எதிர்பார்க்கவில்லை. அமிக்கஸ் தோற்றான். உடனே பாலிடியூலஸ் அவனைப் பிடித்து மரத்தில் கட்டிவிட்டுக் கிரேக்கரனைவரையும் விடுவித்தான். இதுவரை எல்லாருக்கும் அமிக்கஸ் கொடுத்த தண்டனையைத் தன் இடத்திலேயே அவன் அடைந்தான்.

கிரேக்கர்கள் கருங்கடற்கரையிலுள்ள ஸால்மி டெஸ்ஸஸ் என்ற நகருக்கு வந்தபோது, அங்குள்ள கண்குருடான அரசர் ஃவினியஸைப் பற்றிக் கேள்விப்பட்டனர். கால்சிஸ் செல்லும் வழியைப்பற்றியும் பொன்மறியை நாடிச்செல்பவர்களுக்கு நேரும்