பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

143

பயனில்லை. ஆகவே, என்னையும் இட்டுக்கொண்டு சென்று மனைவியாய் ஏற்றுக்கொள்ளுவதானால் உதவுகிறேன்,' என்றாள். ஜேஸன் அவள் கோரியபடி வாக்களித்தான்.

பாவம், அயலின மாதர் மணத்தையோ அயலினத் தாருக்குத் தந்த உறுதியையோ கிரேக்கர் சட்டமும் நீதியும் சிறிதும் மதிப்பதில்லை என்பதை அப்பாவி நங்கை மீடியா அறியவில்லை. அதற்கான தண்டனையையும் அவள் அடையக் காத்திருந்தாள்.

அன்றிரவு மீடியாவும் ஜேஸனும் பொன்மறியின் கம்பிளி தொங்கிய மரத்தை நோக்கிச் சென்றனர். அதைச் சுற்றிக் காத்திருந்த தூங்காத வேதாளம் அலறிக் கொண்டு அவர்களை நோக்கி வந்தது. மீடியா தான் செய்துகொண்டு வந்திருந்த ஒரு பெரிய அப்பத்தைத் தூக்கி அதன்முன் எறிந்தாள். அது அப்பத்தை அடக்க முடியாத ஆவலுடன் தின்றது.சிறிது நேரத்திற் கெல்லாம் அது கண்மூடி அயர்ந்து உறங்கிற்று.

ஜேஸன் மரத்திலேறிப் பொன்மறியின் கம்பிளியை வெற்றிகரமாகக் கைப்பற்றி எடுத்துக்கொண்டு தன் தோழர்களுடன் விரைந்து கப்பலில் ஏறினான். மீடியா தான் உயிருக்குயிராய் நேசித்திருந்த தன் தம்பி அப்ஸிர்ட்டஸை மட்டும் எழுப்பித் தன்னுடன் கூட்டிக் கொண்டு கப்பலில் வந்து சேர்ந்தாள். கப்பல் புறப்பட்டது.

ஜேஸனின் இ டையூறுகள் இத்துடன் தீரவில்லை. பொன் மறியின் கம்பிளி கையாடப்படுகிறது என்பதைப் பொன்மறியே கனவில் வந்து அரசனிடம் கூறிற்று. அரசன் உடனே எழுந்து ஏவலாட்களை அனுப்பி உசாவினான். கம்பிளி பறிபோனது உண்மை என்று தெரிய வந்ததே, அவனுக்கு மீடியா மீது சீற்றம் பிறந்தது. அவளும் ஜேஸனுடன் ஓடிவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை அது தெரிந்ததும் அவன் விரைந்து கப்பல்களைத் திரட்டிக்கொண்டு ஜேஸன் கப்பலைப் பின் தொடர்ந்தான்.

பிடிபட்டால், தாம் அரும்பாடுபட்டுத் தேடிய பொன் கம்பிளியை இழக்க வேண்டிவரும் என்பதை அறிந்து ஜேஸன் துடித்தான். மீடியாவை நோக்கி, “உன் காதல் உண்மையானால்,