பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

145

வைத்தாள். புதல்வியர்கள் கண்கள் வியப்புடன் கண்டுகளிக்க, இள ஆடு ஒன்று அதிலிருந்து கத்திக்கொண்டு வெளிவந்தது. இவ்வருஞ்செயலைப் புதல்வியர் தந்தையிடம் கூறினர். இந்த முறையை அவன் விரும்பாவிட்டாலும், இளமைபெறும் ஆவல் அவனைத் தூண்டிற்று. அவன் இணங்கினான். மீடியா புதல்வியர் கண்காண அவனைத் துண்டு துண்டாக்கினாள். ஆனால், எதிர்பார்த்தபடி அவனை இளைஞனாக்க மறுத்தாள்.

புதல்வியரிருவரும்

வெகுண்டு தம் தம்பியிடமும் பிறரிடமும் கூறிக் கலகம் விளைவித்தனர். அதன் பயனாக ஜேஸனும் மீடியாவும் நகரைவிட்டுத் துரத்தப்பட்டனர்.

காதலரிருவரும் கொரிந்த் நகர் சென்று அதன் மன்னனான கிரியானிடம் அடைக்கலம் புகுந்தனர். அவன் ஜேஸனை அன்புடன் வரவேற்றான். அவனுக்கு ஆதரவளிக்கவும் இணங்கி னான். ஆனால், அயலினத்தாளாகிய மீடியாவைக் கைகழுவி விட்டால், தன் மகள் கிளாகியை கிளாகியை அவனுக்கு மணஞ் செய்வித்து அரசுரிமையையும் அளிப்பதாக உறுதிகூறினான்.

மீடியாவிடமிருந்து பல உதவி பெற்றும், ஜேஸனுக்கு அவளிடம் உள்ளூரக் காதல் கிடையாது. அத்துடன் அவள் மாயத்திறமை கண்டு, அவன் பொறாமையும் அச்சமும் கொண்டான். ஆகவே, அவன் கிரியான் விருப்பத் துக்கு இணங்கினான். இஃதறிந்த மீடியா, தான் அவனுக்காகச் செய்த தியாகங்களை எடுத்துக் கூறி மன்றாடினாள்.பயனில்லாது போகவே, அவள் பழிவாங்க உறுதிகொண்டாள்.

புதிய பெண்ணிடம் நட்பாடுவதாகப் பாசாங்கு செய்து அவளுக்கு மீடியா உயர்ந்த மணிமுடி ஒன்றும் துகிலும் பரிசளித்தாள். அவையிரண்டிலும் கொடு நஞ்சு தோய்க்கப் பட்டிருந்ததென்பதை அறியாமல், கிரியானின் புதல்வியாகிய கிளாகி அவற்றை அணிந்தாள். அவள் உடல் உடனடியாக வதங்கிச் சுருண்டது. அவளைப் பிடிக்கச் சென்ற அரசன் கிரியானும், தொட்டதே அந்நஞ்சுக்கு இரையானான். ஜேஸன் இதைக்கேட்டு, மீடியாவைப் பழிவாங்க ஓடினான். அதற்குள் மீடியாவால் கொல்லப்பட்டுக் கிரியானின் மற்றுமிரண்டு புதல்வரும் கிடந்தனர். மனம் முற்றிலும் இடிந்து போய், ஜேஸன் நிலத்தின்மீது புரண்டான்.