பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

151

அவன் பெருந்தன்மையையும், உள்ளன்பையும் கண்டு அவள் உள்ளம் பூரித்தாள். அவன்மீது தனக்கு அடக்கமுடியாத பாசம் இருப்பதை அவள் அப்போது தான் உணர்ந்தாள்.

அவன் அவளிடம் கொண்ட ஆழ்ந்த நேசமும் விரைவில் எல்லாருக்கும் விளங்கிற்று.

மெலீகரின் தாய்மாமன்மார் இருவர் இருந்தனர். அவர்களும் பன்றி வேட்டையில் பங்குகொண்டிருந்தனர். பன்றியின் தோலைத் தம் குடும்பத்தவருக்கும் நகரத்தவருக்கும் இல்லாமல் வேறொருவருக்கு மெலீகர் உரிமையாக்கியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அத்துடன் அது ஆடவனா யிராமல், ஒரு பெண்ணாயிருந்தது அவர்களுக்கு இன்னும் புழுக்கத்தை உண்டுபண்ணிற்று. எப்படியும் அதை அவளிட மிருந்து பறிக்க அவர்கள் திட்டமிட்டனர்.

பெண்ணாயினும்

அவளை

நேரடியாகத் தாக்க அவர்களுக்குத் துணிவும் வீரமும் போதவில்லை. ஆகவே, அவள் தனியே செல்லும் சமயம் பார்த்து முன்பின்னாகச் சென்று அவளை மடக்கி அதை அவளிடமிருந்து பறிக்க முயன்றனர். எதிர்பாராத் தாக்குதலால் அட்லாண்டாவும் செயலிழந்து நின்றாள்.

கோழைத்தனமான இச்செயலை மெலீகர் தற்செயலாக அவ்விடம் வந்து காணநேர்ந்தது. தன் தாயுடன் பிறந்தவர்கள் என்றுகூடப் பாராமல் அவன் அவர்களை வாளால் தாக்கினான். கோழையாகிய இருவரும் ஓட முயன்று வாளுக்கிரையாயினர்.

அவர்கள் வீழ்ந்தபோதுகூட, மெலீகர் வருத்தப்படவில்லை. அவர்கள் தன் தாய்மாமன்மார் என்பதை உன்னி, அவர்கள் கோழைத்தனத்துக்காக அட்லாண்டாவிடம் மன்னிப்புக்

கோரினான்.

அவன் தன்மீது கொண்ட பாசத்தை இச்செயல் அட்லாண்டாவுக்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டிற்று.வீரரின் பெருந்தன்மை உருவில் வந்த அந்தப் பாசத்தை அவள் பெருமிதத்துடன் ஏற்றுப் புன்முறுவல் செய்தாள். "இவ்வுல கிலில்லாவிட்டாலும் இனி ஒரு உலகில்...” என்று கூறிப் புன்முறுவலுடன் அவள் தன் கையை நீட்டினாள்.