பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

அப்பாத்துரையம் 40

-

66

"கட்டாயம் ணைவோம்,” என்று முடித்து அவன் அக்கையைத் தன் கையால் அழுத்திக் கொண்டான்.

அல்தெயாவும் மெலீகரின் மனைவி கிளியோப்பாத்ராவும் தம் மாளிகை முன்றிலிருந்து அளவளாவிப் பேசிக் கொண்டிருந் தனர். மெலீகர் பன்றியைக் கொன்ற செய்தி அவர்களிடம் முதலில் வந்து எட்டிற்று.

தாயின் உடல் பூரித்தது; மனைவியின் உடல் புல்லறித்தது. மகன் பெருமை பேசி எக்களித்தாள் தாய்; கணவன் தனிச்சிறப் பெண்ணித் தருக்கினாள் மனைவி. தான் ஒரு தாயானதற்காகத் தெய்வங்களுக்கு நன்றி தெரிவித்தாள் அல்தெயா; தன்னை ஒரு பெண்ணாய்ப் பிறப்பித்ததற்குத் தெய்வங்களுக்கு

வாழ்த்தெடுத்தாள் கிளியோப்பாத்ரா.

மகன் கையால்

இரண்டு அன்புக்கோட்டைகளிலும் ஒரே செய்தி அம்பாக வந்து மீண்டும் துளைத்தது - தன் உடன்பிறந்தார் இறந்தனர் - தன் ஒரு பெண்ணின் உரிமை காக்க! தாய் இதுகேட்டுச் சீற்றங்கொண்டாள்! மனைவி இது செவியில் புகாமுன் தன்வயமிழந்தாள்!

66

ஆ, இதற்கா தவங்கிடந்து பெற்றேன்?” என்று அலறினாள் அல்தெயா.

கணவனை அணைக்க எழும் தன் கைகளைப் பிசைந்து முறித்தாள் கிளியோப்பாத்ரா.

66

'ஆ, எரிகிற கட்டையை இதற்கா அணைத்தெடுத்தேன்,” என்றாள் தாய்.

தாயின் உள்ளத்தைவிட மனைவியின் உள்ளம் விரைந்து வேலைசெய்தது.

66

“LOITED"

“என்னை அம்மா என்று கூப்பிடு,”

“ஏன்?’

"பழைய உறவு போய்விட்டது. அது வேண்டா!”

“அம்மா, இப்போதே அந்தக் கட்டையை எரித்து விடேன்”