பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

||--

அப்பாத்துரையம் 40

-

கூறாக உனக்கு இப்போது கரு விளைந்துள்ளது. உன் மகன் உலகில் அரும்புகழ் நிறுத்துவான்,” என்று கூறி அவன் அகன்றான்.

தனேயின் நாட்கள் முன்னிலும் மகிழ்ச்சியாகக் கழிந்தன. அவள் ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றாள். பாங்கியரும் இச் சிறைக்கூடத்திலிருந்தே அவள் தெய்வ அருளால் இத்தகைய அருங்குழவி பெற்றதை எண்ணி மகிழ்ந்து கூத்தாடினர்.பெர்ஸியஸ் என்ற பெயருடன் குழந்தை சிறைக்கோபுரத்தில் வளர்ந்தது.

சிறைக்குள்ளிருந்தே தனே தெய்வ அருட்குழவி ஒன்றை ஈன்றாள் என்ற செய்தி அரசனுக்கு எட்டிற்று. அவனால் இப்புதிய இடரைப் பொறுக்க முடியவில்லை. இருவரையும் தடங்கெட அழிக்க அவன் புதிய சூழ்ச்சி செய்தான்.

தாயையும் சேயையும் அவன் சிறையிலிருந்து யாரும் அறியாமல் வெளியேற்றினான்.ஒருவர் குந்தியிருக்கப் போதுமான மரத்தொட்டி ஒன்றில் இருவரையும் வைத்துக் கப்பலிலேற்றி, நடுக்கடலில் விட்டு விடும்படி அவன் கட்டளையிட்டான். தனேயின் கதறலோ, பிள்ளையின் மருட்சியோ அவன் உறுதியைக் குலைக்கவில்லை.

தனேயின் கதறலை மனிதர் யாரும் கேட்கவில்லை. ஆனால், இறைவன் ஜீயஸ் காதுக்கு அது எட்டிற்று. அவன் தென்றலை அனுப்பி, அத்தொட்டியை அப்படியே மிதக்கவிட்டு, இறுதியில் ஸெரிஃவஸ் என்ற தீவில் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தான்.

ஸெரிஃவஸ் வலைஞர்கள் வாழ்ந்த தீவு. பாலிடெக்டிஸ் என்ற வலைஞரின் தலைவனே அத்தீவின் அரசனாயிருந்தான். அவன் தம்பி டிக்டிஸ் வலைகளை உலர்த்தக் காலையில் கடற்கரைக்குச் சென்றபோது, தனேயும் குழந்தையும் மிதந்துவந்த தொட்டியைக் கண்டான். இருவரும் குளிராலும், ஈரத்தாலும், பசியாலும் குற்றுயிராயிருந்தனர். அவன் அவர்களை வீட்டுக்கு

டுச் சென்று, உலர்ந்த ஆடைகள் கொடுத்து உணவூட்டினான். கடலில் மிதந்த அயர்வுதீரப் பலநாட்கள் ஆயின.

அவர்கள் துயரக்கதையை ஒருவாறு கேட்டறிந்த டிக்டிஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறி, இருவரையும் தன் மகள், மகள் பிள்ளையாகவே வளர்த்து வந்தான்.