பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

அப்பாத்துரையம் - 40

கொடுத்த வாக்குறுதியை உயிர்கொடுத்தும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தால் பெர்ஸியஸ் கவலையுடன் அலைந்து திரிந்தான். ஒருநாள் கடற்கரையோரமாக அவன் உலவும்போது ஒரு பேரொளி உருவம் அவன் முன் தோன்றிற்று. அதுதான் அதேனாதேவி.

ம்

"பெர்ஸியஸ்! தேவர்களுக்கு உன்மீது பாசம் மிகுதி. உனக்கு என்மூலம் அவர்கள் எல்லாவகை உதவியும் செய்ய மனமுவந்து முன்வந்திருக்கின்றனர். இதோபார், அவர்கள் உனக்கு அனுப்பி யுள்ள பரிசுகளை! து வெண்கலத் தலையணி; இதை அணிந்தால் நீ எவர் கண்ணுக்கும் புலப்படாமல் எங்கும் திரியலாம். இதோ இறக்கைகள் பூட்டிய மிதியடிகள். இவற்றில் ஏறிக் கொண்டு நீ நிலம், காடு, கடல், எதுவும் கடந்து செல்லலாம். இந்தக் கேடயம் உன்னை இடர்கள் எல்லா வற்றிலிருந்தும் காக்கும். இந்தக் கொடுவாள் உன் பகைகள் எதுவாயினும் ஒழிக்கும்” என்று தேவி கூறினாள்.

நிலம்,காடு,

பெர்ஸியஸ் துயர்நீங்கி அகமகிழ்வுடனும், நன்றியறி தலுடனும் மீண்டும் மீண்டும் தேவியை வணங்கினான். போகும்வழி, நடந்துகொள்ளும் முறைமை, இடர்களிலிருந்து தப்புவதற்கான எச்சரிக்கைகள் ஆகிய அறிவுரைகள் பலவற்றையும் அதேனா பெர்ஸியஸுக்கு அறிவித்தாள்.

பெர்ஸியஸ் தன் தாயிடம் சென்று நடந்தவை யாவும் கூறி விடைகோரினான். 'தாய் மகனைப்பற்றிக் கவலைப்பட்டாள். அதேனா திருவருளும் தெய்வப் படைக்கலங்களின் உதவிகளும் தனக்குக் கிடைத்திருப்பதை நினைவூட்டிப் பெர்ஸியஸ் தாய்க்கு ஆறுதல் கூறினான். ஆனால், அவன் தாயைப் பற்றிக் கவலைப் பட்டான். தான் இல்லாதபோது தன் தாயிடம் பாலிடெக்டிஸ் கொடுமை பண்ணுவானே என்று அவன் மறுகினான். அதற்கும் அதேனாவையே நம்புவதென்று அவன் தீர்மானித்தான். அதேனாவின் கோவில் எல்லைக்குள் இருப்பவரைத் தாக்க அரசர்களும் அஞ்சுவர் என்பதை அவன் அறிவான். ஆகவே, அவன் தாயை அதேனாவின் கோயிலெல்லையில் கொண்டு தங்கவைத்துச் சென்றான்.

அதேனா கூறிய வழியே பெர்ஸியஸ் தெய்வீக மிதியடி களிலேறிப் பறந்து சென்றான். அந்நாளைய நாகரிக உலகமாகிய