பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




168

அப்பாத்துரையம் - 40

அவள் தலையின் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு பாம்பாகச் சீறிற்று. அவள் முகம் அழகாயிருந்தாலும், உடல் அருவருப்பா யிருந்தது. பெரிய இறக்கைகள் ஆடைகள்போல மூடியிருந்தன. அவளே வல்லரக்கி மெடூசா என்று பெர்ஸியஸ் அறிந்து கொண்டான்.

எவரும் வரமுடியாத தன் தீவில் எவரோ வந்திருப்பதை மெடூசாவும் உணர்ந்து கொண்டாள் என்பதை அவள் சுற்றிச்சுற்றிப் பார்த்த பார்வை தெரிவித்தது.

பெர்ஸியஸ் இப்போது இருந்தது நாலு திசைகளிலு மில்லை. உச்சிக்கு நேர்மேலே அவன் பறந்துகொண்டிருந்தான். இதனால் அவன் மெடூசாவின் பார்வையில் படவில்லை; முகத்தையும் இன்னும் மேலே காணவில்லை. அத்துடன் அம் முகத்தைக் கண்டவர் கல்லாய்ப் போய் விடுவார்கள் என்பதை அவன் மறக்கவில்லை. அவள் தன்னைக்காணாமல் அவன் தன் தலையணியால் தன்னைக் கண் புலப்படாமல் மறைத்துக் கொண்டான். ஒருகையில் வாளுடனும் மற்றக் கையில் கேடயத் துடனும் அவன் மெடூசாவை அணுகினான். மெடூசாவைப் பாராமலே அவள் தலையை அறிந்து வெட்டும்படி, அவன் தன் கேடயத்திலுள்ள அவள் நிழல் வடிவத்தைப் பார்த்துக்கொண்டே சென்றான்.

மெடூசாவின் தலையைப் பெர்ஸியஸின் தெய்விக வாள் முதல்வெட்டிலேயே துண்டுபடுத்திவிட்டது. அச்சமயம் அவள் வீறிட்டுக் கூக்குரலிட்டாள். தூங்கியிருந்த அவள் தோழியர் இருவரும் எழுந்து பறந்து கொலைகாரனைக் கொல்ல விரைந்து வட்டமிட்டனர். ஆனால், அதற்குள் பெர்ஸியஸ், மெடூசாவின் தலையைப் பார்க்காமலே அதை ஒரு பையிலிட்டு, அதனுடன் வானில் எழுந்து பறந்தான். அவன் தலையணி அணிந்திருந்ததால், மெடூசாவின் தோழியர் அவனைக் காணாமல் அலறிக் கொண்டே இருந்தனர். நெடுந்தொலை செல்லும் வரை பனிக்காற் றுடன் பனிக்காற்றாக அவர்கள் அலறல் பெர்ஸியஸுக்குக் கேட்டது.

காற்றுவெளியில் பறந்து வந்துகொண்டிருக்கும்போது, பெர்ஸியஸ் காதுகளில் ஒரு பெண்ணின் அழுகைக்குரல் கேட்டது. குரல் பாறைகளிலிருந்து மிதந்து வந்ததாகத்