பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

169

தோன்றிற்று. அவன் பாறைகளைச் சுற்றிப் பறந்து பார்த்தான். எவரும் அணுகமுடியாத ஒரு கொடும்பாறையில் அழகே உருவெடுத்தாற்போன்ற ஒரு பெண்மணி சங்கிலியினால் அசையமுடியாதபடி கட்டப்பட்டிருந்தாள். அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் தாங்கமுடியாதபடி வேதனையால் துடித்தன. கதறியழுது அவள் தொண்டையடைத்து முகம் வீங்கியிருந்தது.

பெர்ஸியஸ் மனம் பாகாய் உருகிற்று. அவன் உடனே தன் வாளின் மொட்டைப் பக்கத்தால் சங்கிலிகளை உடைத்தெறிந்து அவளை விடுவித்தான். நீண்ட வேதனையால் அவள் சோர்ந்து உணர்விழந்தாள். பெர்ஸியஸ் அருகில் உள்ள பாறைகளில் பறந்து சென்று தேடி, நீர் கொணர்ந்து தெளித்து, உணர்வு வருவித்தான். அதன்பின், அவன் அப்பெண்மணியிடம் கனிவுடன் பேசினான்.“நீயார் அம்மா? இங்கே எப்படி வந்தாய்? இந்த இடரை உனக்கு யார், எதற்காகச் செய்தார்கள்?" என்று கேட்டான்.

பெண்மணியின் உடலில் இப்போதும் நடுக்கம் தீரவில்லை. அவள் கைகால்கள் புயலில்பட்ட தளிர்கள்போலத் துடி துடித்தன. அவள் தன் துயரக்கதையைச் சுருக்கமாகக் கூறினாள்:

66

எனக்கு உதவ வந்த அன்பரே! என் டர் இன்னும் முற்றிலும் தீரவில்லை. இங்கிருந்து போக முடியுமானால் விரைந்து போய்விடவேண்டும். ஆகவே, சுருக்கமாகக் கூறுகிறேன்,” என்று தன் வரலாற்றைக் கூறலானாள்:

“என் பெயர் அண்ட்ரோமீடா.என் தந்தை கெஃவியஸும் தாய் கஸியோபியாவும் அருகிலுள்ள நாட்டை ஆள்பவர்கள். நான் பருவமடைந்தபோது என் தாய் என்ன காலக்கேட்டினாலோ என் அழகைப்பற்றி எல்லை கடந்து பெருமைப்பட்டாள். கடலிறைவி நெரியஸ் அழகுகூட என் அழகுக்கு ஈடாகாது என்று அவள் புகழ்ந்துவிட்டாள். கடலிறைவன் தன் ஒற்றர்கள் மூலம் இதை அறிந்து என்மீதும் எங்கள் நாட்டின் மீதும் ஒரு பெரும்பூதத்தை ஏவிவிட்டான். என்னை அப்பூதத்துக்கு இரையாக அனுப்பிவிட்டால், நாடும் பிறரும் காப்பாற்றப் படலாம் என்ற செய்திகேட்டு, என் தாய் தந்தையரே கண்ணீருடனும் கதறலுடனும் என்னை இங்கே கட்டிவிட்டுச் சென்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அப்பூதம் வந்துவிடும். நாம் அதற்குள் ஓடிவிட வேண்டும்.