பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

அப்பாத்துரையம் - 40

பெண்மணி இவ்வளவு கூறுமுன் பாறை நடுங்கும்படி பூதம் அலறிக்கொண்டு வந்தது. அண்ட்ரோ மீடாவுக்கு வந்த உணர்வும் போயிற்று. ஆனால், பெர்ஸியஸ் விரைந்து தன் வாளைச் சுழற்றிப் பூதத்தை வெட்டி வீழ்த்தினான். அண்ட்ரோமீடாவை மீண்டும் உணர்வுபெறச் செய்விப்பது பெருங்காரியமாய் போய்விட்டது. அவள் உணர்வுபெற்றதும் தானும் இளைஞனும் உயிருடன் இருப்பதுகண்டு வியந்தாள். அருகே அச்சந்தரும் பூதத்தின் உருவம் துண்டுபட்டுக் கிடப்பது கண்ட பின்னரே, தன் துன்பம் ஒழிந்தது என்று அவளால் நம்ப முடிந்தது.

பெர்ஸியஸும்

அண்ட்ரோமீடாவும் மன்னன் செஃவியஸிடமும் அரசி கஸியோபியாவிடமும் வந்தனர். அரசன் அரசியரால் தம் கண்களை நம்ப முடியவில்லை. செய்தி முழுவதும் கேட்டபின் அரசி அண்ட்ரோமீடாவையும், அரசன் பெர்ஸியஸையும் அணைத்து இன்பக் கண்ணீராட்டினர்.

"எங்கள் பழியைப் போக்கி எங்கள் இன்னுயிர்ப் பாவையையும் உயிருடன் எங்களுக்குத் தந்த உமக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்,” என்றான் அரசன்.

“உங்கள் இன்னுயிர்ப் பாவையை என் இன்னுயிர்ப் பாவை ஆக்கினால் போதும்," என்றான் பெர்ஸியஸ்.

பெண்ணின் விருப்பமறிய அரசன் அவளை நோக்கினான்.

அண்ட்ரோமீடா தாயைக் கட்டிக்கொண்டு, “உங்களை விட்டுநான் எப்படிப் பிரிந்து செல்வேன்?” என்று கண்கலங்கினாள்.

இருவர் குறிப்புமறிந்த தாய்தந்தையர், பெர்ஸியஸுடன் அண்ட்ரோமீடாவின் திருமணத்தை நாடுகளிக்க ஆரவாரத் துடன் நடத்தினர்.

சிலநாள் மனைவியின் நகரில் இருந்தபின், அண்ட்ரோ மீடாவுடன் பெர்ஸியஸ் ஸெரிஃவெல் தீவுக்குப் புறப்பட்டான். மெடூசாவின் தலையடங்கிய பை அவன் கையில் எப்போதும் தொங்கிற்று.

அதேனாவின் கோயிலில்கூட பாலிடெக்டிஸின் தொல்லை தனேயை விடவில்லை. அவன் அவளிடம் தன் ஒற்றர்களை அனுப்பியும் தூதர்களை அனுப்பியும் நச்சரித்தான். எதற்கும்