பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

185

q

மங்கையைப் பார்த்ததேயில்லை. துவளும் கொடிபோல ஒடுங்கி நிமிர்ந்த அவள் மேனி, நிலவு ஒளிவீசுவதுபோல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கருத்து இருண்டிருந்த அவளது கூந்தல், சுருண்டு சுருண்டு அவளது கழுத்தைச் சுற்றிப் பரந்து விரிந்து கிடந்தது; குதிகால்வரையில் நீண்டு பரந்திருந்த அத்தலைமுடி, மயில்தோகை அவளைப்போர்த்ததுபோல் அமைந்திருந்தது.செம்பருத்திப் பூவின் செவ்விதழிலும் சிவந்து காணப்படும் அவளது வாய் சற்றே திறந்தபோது வெண்முத்துப் போன்ற பல்வரிசை, ஒளி வீசி நின்றது. அவளது அகன்று பரந்த கண்களில் நீலக் கருவிழிகள், வானத்தில் சுடர்விடும் விண்மீன்போல் வெட்டி வெட்டி மின்னிக்கொண்டி டி ருந்தன. அவளது எழில் மேனியோ, பொன்னை உருக்கி வார்த்த பொம்மைபோல் இருந்தது.புகைப்படலம் போன்றமென்மையுடன் அவள் புனைந்திருந்த ஆடை, அவளது அழகை மேலும் சிறப்பாக எடுத்துக் காட்டியது. அழகே உருவாகத் திரண்டதுபோல் நின்ற அப்பூங்கொடியாள் மலையழகனைப் பார்த்துப் புன்முறுவல்காட்டி நின்றாள். வைத்த கண் வாங்காமல் உள்ளமும் எலும்பும் ஒன்றாய் உருகித் தேனுறு பாய இன்பஅலையில் அமிழ்ந்து செயலற்று நின்ற மலையழகன், அந்த அழகு வெள்ளம் அகலத்திறந்த கண்மடைகள் வழியே உள்ளே பாய்ந்து அவன் உடலில் நிரம்பிப் பொங்குவதை உணர்ந்தான்.இன்பமும் அன்பும் சுரந்து பொங்கும் இன்ப ஊற்றான அந்த எழிலணங்கின் அருகில் செல்ல விழைந்தான்.

ஆனால் ஆழமும் அகலமும் உடைய அந்த ஏரி குறுக்கிட்டது. கரையில் படகு ஒன்றுமில்லை. தாவிப் பாய்ந்து விடவேண்டுமென்ற உள்ளத் துடிப்புடன் வழியறியாது திகைத்து நின்ற மலையழகனைப் பார்த்து அப்பேரெழில் நங்கை தளிர்க்கைகளை நீட்டி, “நடந்து வா,” என்று இசை ததும்பக் கூறினாள்.

என்ன வியப்பு! ஏரிநீர் பனிக்கட்டியாய் உறைந்து வழி காட்டியது. பளிங்கு பதித்த வான வீதிபோல் அது அவனுக்குத் தோன்றியது.

'இங்கு வருக" என்றன அவள் வாயிதழ்கள்; எட்டிப் பிடிப்பதுபோல் அவள் எழிற் கைகளைப் பரிவுடன் மேலும் நீட்டினாள்.

மலையழகன் உணர்வெல்லாம் அந்த இன்பக் காட்சி யிலேயே முற்றிலும் ஒன்றிவிட்டது; அவனை மறந்தான்; அவன்