பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(188) ||___

அப்பாத்துரையம் - 40

அவர்களுக்கு ஏராளமாய் குழந்தைகள் பிறந்திருப்பதை எண்ணி அவன் வருந்தினான்.

அவன் அப்படி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் முதலை அளவு பருமன் உள்ள பச்சை ஓணான் ஒன்று பாதாளக் குகையிலிருந்து மெள்ள நகர்ந்து வந்து, அவன் பக்கத்தில் நின்றது. அப்பாவி பெரியண்ணன் அப்படியே அயர்ந்துவிட்டான்; குலை நடுங்கி, அச்சத்தால் கைகால் விறைத்து, ஆடாமல் அசையாமல் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். அது அவனை ஒரே வாயில் விழுங்கிவிடும் என்றுதான் அவன் எண்ணினான். ஆனால், அந்த முதலை ஓணான் ஈரநெஞ்சு படைத்தது.பின்னும் சற்று நெருங்கிவந்து அருமையாகப் பேசத் தொடங்கியது. “ஏனப்பா பெரியண்ணா! ஏன் என்னைக் கண்டு அஞ்சுகிறாய்? நான் உனக்கொன்றும் தீங்கு செய்ய மாட்டேன்; அதற்கு மாறாக, நான் உனக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா என்று பார்க்கத்தான் வந்திருக்கிறேன்,” என்றது.

எடுத்த எடுப்பிலேயே அந்த முதலை ஓணான் அவனைத் தின்று விழுங்கப்போவதில்லை என்பதை அறிந்ததும் அவன் சற்று ஆறுதல் அடைந்தான். ஆனால், ஓணான் பேசுவதைக் கேட்க அச்சமாகத்தான் இருந்தது. நெஞ்சுக்குள் “கடவுளே! காப்பாற்று,' என்று முணுமுணுத்துக் கொண்டான். சிறிது மனந் துணிந்து ஓணானிடம் பணிவாகப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.

“அம்மா! உங்களைக் காண மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஏதோ உதவி செய்ய வந்ததற்கு என் மனமார்ந்த நன்றி. உண்மையிலேயே எனக்கு இப்போது உதவி மிகவும் தேவை. எனக்குப் பன்னிரண்டு பெண் மக்கள் இருக்கின்றனர். வாழ்க்கை நடத்த வழி தெரியாமல் திகைக்கிறேன். இந்த இக்கட்டிலிருந்து விடுபட ஏதேனும் வழி கூறினால், உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு,” என்றான்.

அதைக்கேட்டஅந்த ஓணான் புன்சிரிப்புச் சிரித்தது.கொழு கொழு என்று உருண்டு திரண்டு பருத்திருந்த அந்த ஓணானின் சிரிப்பும் ஓர் அழகாகத்தான் இருந்தது; அதன் செதில்கள் எல்லாம் வெயிலில் பச்சைக் கல்போல் பளபளத்தன. அதன் கண்களிலும் வாயிலும் சிரிப்புத் தாண்டவமாடிற்று. அது கண்ணுக்கினிய காட்சியாகத்தான் இருந்தது. ஆனால்,